உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவா ரிலைநீ விழித்துப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே"

67

என்று அருட்பெருங்குரு உணர்த்திய அருமையைக் கூறுகிறார் வள்ளலார்.

"குலத்திலே சமயக் குழியிலே நரகக்

குழியிலே குமைந்து வீண்பொழுது

நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து

நிற்கின்றார் நிற்கநா னுவந்து வலத்திலே நினது வசத்திலே நின்றேன்

மகழ்ந்துநீ என்னுளம் எனுமம் பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்

பண்ணிய தவம்பலித் ததுவே'

"5"

என உலகோர் நிலையை எடுத்துரைத்துத் தம் உவகை நிலையையும் கூறுகின்றார்.

66

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்”

எனத்தம் நிலைவிளக்கம் தருகின்றார் வள்ளலார். மேலும்,

“சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி”

“பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் கணக்கும் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே”

46

'சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனை மேலேற்றித்

தனித்திரு வமுதளித்த தனித்தலைமைப் பொருளே'

எனச் சாதிப் பிரிவுகளைத் தம்மாட்டு ஒழித்த இறையருளைப் பாராட்டுகிறார்.

உலகவரை நோக்கிச்,

66

சா

தியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண்டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே”