உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

என எச்சரித்து நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த விரும்புகிறார்.

பிளவும் பிரிவும் பிணக்கும் இல்லாப் பேரருட் பெருக்க உலகைக் காண்பதற்கு வள்ளலார் விரும்பிய இவ்விருப்பம் வள்ளுவ வித்தின் வான்கனி எனத் தக்கதாம்.

வள்ளலார் உரைநடைக் குறிப்பு ஒன்று:

66

"எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள்செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்."

இறைவன் நோக்கிய இவ்வேண்டுதல் வள்ளலாருக்காகவோ? அவர்தாம் இறையருள் அருள; அவற்றை யெல்லாம் விட்டு விலகியவர் ஆயினரே! தம்மைச் சார்ந்தோர் தம் அன்பர் தம் அடியர் பின்வருவோர் ஆகிய உலகோர்க்கெல்லாம் வேண்டிய பொது வேண்டுதல் என்க. பற்றிக்கொண்டு பயன்கொள்ளும் பான்மை, சுற்றியிருந்தோர்க்கு இருந்திருக்குமானால் வள்ளலார் வாக்கு வையக வாக்காகவே திகழ்ந்திருக்கும். அது வள்ளுவர் புகழ் பாடியவர்க்கும் வாய்க்கவில்லை; வள்ளலார் புகழ் பாடியவர்க்கும் வாய்க்கவில்லை! வாய் முழக்கம் என்ன பயன் செய்யும்? வாய்மை முழக்கமன்றோ பயன் செய்யும்!

அற்றமும் குற்றமும்

மறைத்தல் இருவகை; ஒன்று, மானங்கருதி உடலை மறைக்க வேண்டும் வகையான் உடையால் - மறைத்தல்; மற்றொன்று, குற்றம் உண்டாகாதவாறு உள்ளத்தைக் கட்டுப்படுத்தி மறைத்தல். இவற்றைக் கூறும் வள்ளுவர், இரண்டாம் மறைத்தல் இல்லாக்கால் முதன் மறைத்தலால் ஆவதென்ன என்பார். மற்றும் பிறர் குற்றத்தைப் பெருமை மறைக்கும்; சிறுமையோ பிறர் குற்றத்தையே எடுத்துரைக்கும்.

"அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி”