உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வள்ளுவர் வழியில் வள்ளலார்

"அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்"

69

என்பவை அவை. இவற்றை உள்ளீடாகக் கொண்டுரைக்கும் வள்ளலார்,

66

"அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி

ஆடிய சிறுபரு வத்தே

குற்றமும் குணங்கொண் டென்னையாட் கொண்ட

குணப்பெருங் குன்றமே குருவே'

55

என இறைவனை விளித்து 'அபயத்திறன்' பாடுகின்றார் (10). சொல்லாட்சி வள்ளுவர் வழி வந்ததாயினும் பொருளாட்சியை வள்ளலார் புதுக்கிக் கொண்ட அருமை எண்ணத்தக்கதாம். அடக்கமுடைமை

'அடக்க முடைமை' விரித்தவர் வள்ளுவர்; ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் உரைத்தவர் அவர்; அடக்கம் அமரருள் உய்க்கும் என மேனிலை காட்டியவர் அவர். அவரே,

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்"

என்றும் உரைத்தவர்.

அடக்கவகை, அடக்கப் பயன் ஆகியவற்றை விரித்துக் கொள்கிறார் வள்ளலார்.

“படிப்படக்கிக் கேள்வியெலாம் பற்றறவிட் டடக்கிப்

பார்த்திடலும் அடக்கியுறும் பரிசமெலாம் அடக்கித் தடிப்புறும்ஊண் சுவையடக்கிக் கந்தமெலாம் அடக்கிச் சாதிமதம் சமயமெனும் சழக்கையும்விட் டடக்கி மடிப்படக்கி நின்றாலும் நில்லேனான் எனவே

வனக்குரங்கும் வியப்பவென்றன் மனக்குரங்கு குதித்த துடிப்படக்கி யாட்கொண்ட துரையேயென் னுளத்தே

சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே”

என்கிறார். கல்வி கேள்வியெலாம் அடக்கம் பார்வையடக்கம் தொடலடக்கம் சுவையடக்கம் முகர்வடக்கம் சாதிமத சமயச் சழக்கடக்கம் சோம்படக்கம் துடிப்படக்கம் என எத்தனை அடக்கங்களைச் சுட்டுகிறார் வள்ளலார். வள்ளுவத்தைத்