உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

திரட்டிய அடக்குரை ஈதெனின் ஐயமுண்டோ? இவ்வடக்க விளக்கம் தனிக் கட்டுரையாய் விரிக்கத்தக்க விரிவுடையதென அமைவோம்.

உள்ளும் புறமும்

“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

என்று

உறவு கலவாமை வேண்டும்"

சண்முகமணிமாலையில் சாற்றுவார் வள்ளலார்.

அக்கருத்து அவரிடம் அழுத்தமாக ஊன்றியிருந்தமையால்

“அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை”

“தப்படி எடுத்துக் கொண் டுலகவர் போலே

சாற்றிட மாட்டேன்”

“தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும் தப்புரை ஈதன்று சத்தியஞ் சொன்னேன்”

“வாய்மட்டிற் சொல்கின்ற வார்த்தையன் றிதுவென் மனமொத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும்”

66

"தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்

திருட்டுப்பேச் சன்று”

“புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்

புகன்றசொல் லன்று"

பற்றறுத்தல் பதிகம் ஒன்றுளே வரும் தொடர்கள் இவை.

புறங் கூறாமை, கூடா ஒழுக்கம், தீ நட்பு இவற்றில் வரும் செய்திகள் அல்லவோ இவை.

“புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியார் உடைத்து’

"கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு’

“எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றிற் பழிப்பார் தொடர்பு"