உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

71

என்பவை உள்ளும் புறம்பும், சொல்லும் செயலும் வெவ்வேறாம் இயல்பை எடுத்துக் காட்டுமே! உள்ளொத்த சொல்லும் செயலும் உடைமை தானே விருந்தோம்பல், இன்சொல் உரைத்தல் ஆகியவற்றின் உயிர்ப்பு! இப்படி வள்ளுவர் வாய்மொழி வள்ளலார் வழியில் மடைதிறந்த வெள்ளமெனப் பாய்தல் தொட்ட இடத்தெல்லாம் தட்டுப் படுவதேயாம்.

உணர்ச்சியும் புணர்ச்சியும்

ரு

உணர்ச்சி நட்பு, புணர்ச்சி நட்பு என நட்பை இரு கூறாக்குவார் திருவள்ளுவர். புணர்ச்சி நட்பினும் உணர்ச்சி நட்பே நட்பு என்பதும் அவர்தம் முடிவு.

"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்"

என்று இக்கருத்தைத் தெளிவிப்பார்.

அனுபவமாலையிலே இதனை அருமையாகக் கையாள் கிறார் வள்ளலார். நட்பியலில் இருந்து காதலியலுக்கும், அதில் இருந்து இறையியலுக்கும் மடைமாற்றி நடையுறுத்து கிறார் வள்ளலார். புணர்ச்சி என்பதையே முன் அடையினால் உணர்ச்சியாக்குகின்ற முறைமையையும் படைத்துவிடுகிறார்.

“புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான் புத்தமுத நானுண்டு பூரித்த தருணம் சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம் செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ?”

"அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம் தூயவொளி பெற்றழியா தோங்குவடி வானேன்

சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ?”

“பிறியாமல் என்னுயிரிற் கலந்துகலந் தினிக்கும்

பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்

அறிவாளர் புறப்புணர்ச்சி எனையழியா தோங்க

அருளியதீண் டகப்புணர்ச்சி யளவுறைக்க லாமே”

இன்னவாறு பலப்பல பாடல்களில் இயம்புகின்றார். அகப் புணர்ச்சி என்பதென்ன? வள்ளுவர் வழங்கும் உணர்ச்சியேயாம்.