உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

பயனில சொல்லாமை

பயனில சொல்லாமை பகர்ந்த வள்ளுவர் அச்சொல் கூறுவானையும் கேட்பானையும் நன்றென நயப்பானையும் ஒரு சேரப் 'பதடி'என்பார்.

“பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்

என்பது அது. மணியிலா நெல்லைப் பதடி (பதர்) என்பது உழவடைச் சொல். பயனின்றிக் கழிந்த ஒரு பொழுதைப் 'பதடி வைகல்' என்றமையால் 'பதடிவைகலார்' எனப் பெயர் கொண்ட சங்கச் சான்றோர் ஒருவர் உளர். அப்பதடி அல்லது பதர் என்பதை வள்ளலார் புத்தாக்கம் செய்து புகல்கிறார். பயனில் சொல் சொல்வதை,

“வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயனென்’

55

என வினாவுகின்றார் (வரம்பிலின்பம் 11). பயனில் சொல்லுக்கு 'வாய்ப்பதர்' என்பது அருமையன்றோ! அதனையுடையாரும் வாய்ப்பதர் தாமே! இவ்வளவோ, வாய்ப்பதர்களால் மெய்ப் பொருளை அல்லது செம்பொருளைக் காண்டற்கு இயலாது என்பதை எடுத்து மொழிகிறார்.

“வன்செய் வாய்வாதருக்கு அரிய பொருளே”

என்பது அது (நடராசபதிமாலை 25). இது நன்செய் விளைவுமன்று; புன்செய் விளைவுமன்று; வன்செய் விளைவு; அதுவும் அக விளைவும் அன்று; வாய் விளைவு; அவ்விளைவும் மணிவிளைவும் அன்று; காற்றிலே பறந்தோடும் பதர் விளைவு; 'வாதர்' வாதம் செய்பவர்; காற்றார்; காற்றிலே தூற்றும் பொலியில் ஓடும் பதர் அன்னர் என்க.

அவையத்து இருத்தல்

இறைவனைத் தந்தைமையாகக் கொண்டவர் வள்ளலார். தந்தையாய் மட்டுமன்றித் தாயாகவும் கண்டவர்.

“தந்தையும் தாயும் பொடித் திருமேனி

அம்பலத் தாடும் புனிதனே"

எனத் தெளிந்தவர்; அதனைப் பல்கால் பகர்ந்தவர்.

தந்தையாகக் கண்ட இறைவன், தந்தை கடமையைச் செய்துள்ளானா? தந்தை கடமை என வள்ளுவர் வகுத்ததென்ன?