உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார் “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்”

73

என்பது. தம் தந்தையாம் இறைவன் ஓதாது உணரச் செய்ததையும், தமக்குப் படிப்பிக்கப் படித்ததையும் பல இடங்களில் கூறுகிறார் வள்ளலார். தம்மை இறைவன் அவையத்து முந்தியிருப்பச் செய்த தகைமையையும் சொல்ல மறந்தார் அல்லர். அவையத்து முந்தியிருப்பச் செய்த செயலைக் கழக நடு வைத்த செயலாகக் குறிக்கிறார். அக்கழகம் கற்றோர் கழகம்; அடியார் கழகம்; சன்மார்க்கர் கழகம்.

“கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச்

செல்வமொடு வளர்க்கின்றாய்”

“சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய்”

“சன்மார்க்க சங்க நடுவிருக்க அருளமுதம் நல்கிய நாயகன்” “சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன்”

என்றெல்லாம் பாடுகிறார். நடுவைத்தல் 'நடுநாயகமாக' வைத்தல் - தலைமையாக வைத்தல் அன்றோ! இன்னும் வளமான தந்தை, கல்வியொடு செல்வமும் சேர வைப்பான் அல்லனோ! இறைவன் செல்வப் பிள்ளையாம் வள்ளலார்க்கு இறைவன் செல்வ வளமும் அருளி அதனால் வளர்த்து வருகின்றானாம்! எச்சம்

“தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்"

என்னும் குறளை எவர் அறியார். 'எச்சம்' தரும் பொருளுள் மக்கள் என்பதும் ஒன்றுதானே! அம்மக்கட் பொருளில்,

“தந்தை தன்மையே தனையன்தன் தன்மையென்று

சாற்றுதல் சத்தியங் கண்டீர்”

“என்னப்பன் தன்மை என்றன்மை என்றறிமின்”

ஒரே பாடலில் வரும் செய்திகளே இவை. தந்தை தன்மை கொண்டு மகன் தன்மை அறியலாம் என்பதை முதற்கண் கூறிய வள்ளலார், மகன் தன்மை கொண்டு தந்தை தன்மையை அறியலாம் என் விற்பூட்டுப் பூட்டுகிறார். ஒரே கருத்தை இருமுறையால் வலியுறுத்துதல் வள்ளுவர்க்கு வழக்கே! வள்ளலார்க்கும் அவ்வழக்குண்டு என்பதைக் காட்டுவது இது.