உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அறிவுடைமை

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

அறிவின் இலக்கணம் கூறும் வள்ளுவர், மனம் போன போக்கில் போகவிடாமல் தீமையில் இருந்து திருப்பி நல்வழியில் செலுத்துவது அறிவு என்பார்.

"சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு”

என்பது அது. இதனை மிக எளிமையாக

"மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர்” வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே நாறாத மலர்போலும் வாழ்கின்றீர்”

என்கின்றார் (உறுதிகூறல் 1:2).

அறிவின்மை

அறிவிலாமை விளக்கத்தை முன்னே உரைத்து நாறாத மலரை உவமையாக்குகிறார் வள்ளலார். இவ்வுவமை வள்ளுவர் வழிப்பட்டதாம்.

"இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற(து) உணர விரித்துரையா தார்"

என்னும் குறளில் உள்ள 'நாறாமலர்' உவமை, அறிவுப் பயன் இல்லார்க்கு உரியதாக்கப்படுகின்றது. மலர்ந்தும் மணம் பரப்பா மலர் போல்வர் பிறந்தும் அறிவுப் பயன் கொள்ளா மாந்தர்! இருக்கும் அறிவை எடுத்துரையார்க்கு வள்ளுவர் உவமை யாக்கிய பொருளை, இருக்கும் வாழ்வுப் பயன் இல்லார்க்கு உவமையாக வள்ளலார் அமைத்துக் கொண்டதே ஒரு மாற்றம். அவ்வளவே!

கள்ளுண்ணாமை

அறிவறிவதற்காகப் பொருள் கொடுத்தல் தகும்; ஆனால், அறியாமையைப் பெறுவதற்குப் பொருள் கொடுத்தல் எத்தகு அறியாமையுடையது! கள்ளுக்குக் காசு கொடுத்துக் குடிப்பது அதுதானே! கள்ளுண்பதற்கும் நஞ்சுண்பதற்கும் உள்ள வேறு பாடுதான் என்ன? என்று கூறுபவர் திருவள்ளுவர். கட்குடியனுக்கு அறிவுரைத்துத் திருத்துவோம் என்பது நீராழத்துள் புகுந்த வனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாம் என்றும் அவரே கூறுவார்.