உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார் “களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று’

""

75

என்பது அது. குடியர் நிலைதான் இப்படி என்றால் குடியாமலே குடியரெனத் திரிவாரும் உளர் என்று அவர் தன்மையை விளக்கு கிறார் வள்ளலார்.

“பொய் விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர் புலைகொலைகள் புரிகின்றீர் கலகலவென் கின்றீர் கைவிளக்குப் புடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற களியரெனக் களிக்கின்றீர் கருத்திருத்தும் கருதீர்”

என்கிறார் (உறுதிகூறல் 2:4). கருத்திருந்தும் கருதாமை, கணிய ரெனக் களித்தல், கைவிளக்குப் பிடித்துக் கிணற்றில் விழல் என்பவை ஆளப்பெற்று வள்ளுவரை நினைவுறுத்துகின்றன. சொல்லும் சொல்

சொல்லின் இலக்கணத்தைச் சொல்வன்மையில் சொல்வார் வள்ளுவர். அதில்

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"

என்பது ஐந்தாம் பாட்டு (645). இதற்கு விளக்கம் தருவார் போலப் பாடும் வள்ளலார் இன்னொரு குறளையும் நினைவுறுத்துவார் போல இணைத்துக் கொள்கிறார். அது,

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வா யெல்லாம் செயல்” (33)

என்னும் அறன் வலியுறுத்தற் குறள்.

“சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற எல்லாம்

துரிசலவே சூதலவே தூய்மையுடையனவே வெல்லுகின்ற வார்த்தையன்றி வெறும்வார்த்தை என்வாய் விளம்பாதென் னையர்நின்று விளம்புகின்றபடியால்

“செல்லுகின்ற படியேநீ காண்பாயித் தினத்தே

தேமொழியப் போதெனைநீ தெளிந்து கொள்வாய் கண்டாய்