உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

ஒல்லுகின்ற வகையெல்லாம் சொல்லுகின்றேன் அடிநான் உண்மையிது உண்மையிது உண்மையிது தானே'

து வள்ளலார் தனிப்பாடல்களுள் ஒன்று.

கல்லாமை

597

கல்வி அறிவில்லாதான் கற்றோர் அவையில் பேச வேண்டு மென அவாவுகின்றான். அவ் வவாவுதல், பெண்மைக்குச் சான்றாகத் திகழும் மார்பகமே இல்லாத பேடிப்பெண் மணவாளன் ஒருவனொடு கூடி மகிழ விரும்பும் பொருந்தா விருப்புப் போன்றது என்கிறார் திருவள்ளுவர்.

“கல்லாதவன் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று'

என்பது அது. இதனைக் குடும்ப கோசத்தில் இளமையில் கல்வியில் கருத்துக் கொள்ளாமல்

கடை' ப்பிள்ளையாய் வளர்ந்தவன், அக் கல்விச் செல்வத்தைப் பெறுதற்குப் பின்னே விரும்புகின்றான். அதனைக் குறிக்கும் வள்ளலார்.

66

'அருஞ்செல்வ மெனுங்கல்வி அறிவில்லாக் குறை யொன்றே

அடைந்திட் டேனவ்

வருஞ்செல்வத் தாசையுளேன் பேடிமணம் நாடிமனம்

வருந்தல் போன்றே"

என்கிறார். இவண் பேடி, மணம் நாடி வருந்துதலை உவமையாகக் காட்டியது அறிக.

முப்பற்று

“காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்"

என்பது திருக்குறள்.

விருப்பு வெறுப்பு அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் அழியுமாறு நடந்தால் துன்பம் வாரா தொழியும் என்னும் இப்பொருளைக் கொண்டு,

“காமமும் வெகுளியும் கடுஞ்சொல் ஆதிய

நாமமும் கனவினும் நண்ண லின்றியே