உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

சேமமும் ஒழுக்கமும் செறிவும் ஆதிய தாமமு மணியும்போற் றாங்கி ஓங்கியும்”

என்கிறார் வள்ளலார் (குடும்ப கோசம்; முயற்சிப் படலம்).

மயக்கம் என்று வள்ளுவர் சொல்லியதைக் கடுஞ்சொல் ஆதிய என்பதால் விரித்துக் கொள்கிறார் வள்ளலார். நாமம் கெடுதலைக் கனவிலும் பொருந்தாமையால் சிறப்பிக்கிறார். 'ஓங்கி' என்பதால் நலப்பேற்றை உறுதி செய்கிறார். இவை வள்ளலார் பாடல்கள் வழியே கண்டவை. இனி வாழ்வு வழியே துலங்கும் வள்ளுவக் காட்சிகளைக் காண்போம்.