உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

-

இளங்குமரனார் தமிழ்வளம் 35

நூலாகும். திருக்குறளைப் போலவே அறம், பொருள் என்னும் பால் முறை வைப்புடையது அது. அதன் அதிகாரப் பகுப்புகளும் பெரும்பாலும் திருக்குறளை அடியொற்றியே செல்கிறது. தொகைப் படுத்தப்படும் நூல்களையும்; அதன் பாவகையையும் ஒரு நெறிப் படக் கொண்டு செல்கிறது. இவ்வகையில் வெண்பாயாப்பினதாம் புறப்பொருள் வெண்பா மாலையை அடுத்து, அதே வெண்பா யாப்பால் அமைந்த பெரும் பொருள் விளக்க வெண்பாக்களை அடைவு செய்கின்றது.

புறத்திரட்டுத் தொகையின் தனிப்பெருஞ்சிறப்பு, தொகுக்கப் பட்ட பாடலைச் சார்ந்து அப் பாடல் அமைந்துள்ள நூலைக் குறிப்பிடுவதாகும்.

தொல்காப்பியம் புறத்திணையியல் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியர், புறத்திரட்டு வழியாக அறியப்படும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்கள் முப்பத்து ஒன்பதனை எடுத்துக் காட்டியிருந்தும், ஓரிடத்தில் தானும் அவர், 'பெரும் பொருள்' என்றோ, 'பெரும் பொருள் விளக்கம்' என்றோ காட்டினார் அல்லர் என்பது அறியத் தக்கதாம். புறத்திரட்டு என்னும் தொகைநூல் வாய்க்கப் பெற்றதும், அந்நூல் பாடல்கள் இன்ன நூலைச் சார்ந்தன என்பது குறிக்கப் பெற்றதும் ஆகியவையே நாம் 'பெரும் பொருள் விளக்கம்' என்றொரு நூலை அறிந்து கொள்ள வாய்ப்பாயிற்றாம்.

புறத்திரட்டுப் பதிப்பாசிரியர் வையாபுரியார், அந்நூன் முகத்தில் தொகை நூல் பற்றிய விரிவாக ஆய்கின்றார். புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள நூல்களைப் பற்றியும் ஆய்வு நிகழ்த்துகின்றார். அவர் பெரும் பொருள் விளக்கம் குறித்து வரையும் செய்திகள் வருமாறு:

வை

'புறத்திரட்டினாலன்றிப் பிறவாறு அறியலாகாத நூல்களும் கடைசியாகக் கூற நிற்பது பெரும் பொருள் விளக்கமாம். இந் நூலினின்றும் 41 செய்யுள்கள் தொகுக்கப்பட்டுள்ளன. யனைத்தும் புறப்பொருள் பற்றியன வாதலின் இந்நூல் புறப் பொருளை உதாரணங்களால் விளக்கும் ஓர் நூலாதல் வேண்டும்.நச்சினார்க்கினியர், சிந்தாமணி உரையில் (187) 'பின்னர் பெருந்திணை பெறுமே' என்பதனால் ஒப்பும்

நான்கும்