உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

95

பெருந்திணைப்பாற்படும் கந்தருவமாமாறு பெரும் பொருளான் உணர்க' என்று கூறியுள்ளார். இவ்வாக்கியத்தை நோக்கிய அளவில், பெரும் பொருள் என்பது ஓர் பொருளிலக்கண நூலாக இருத்தல் கூடுமென ஊகிக்கலாம். இவ்வூகம் பொருத்த முடைத்தாயின், இவ்விலக்கண நூலினை மேற்கோளுடன் விளக்கிய ஒரு நூலாகப் பெரும் பொருள் விளக்கம் இயற்றப்பெற்றதாகலாம். பெரும் பொருள் விளக்கச் செய்யுட்கள் ஒரு சில நச்சினார்க்கினியரால் புறத்திணையுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இது தோன்றி காலம் முதலியன ஒன்றும் இப்போது அறிதற்கில்லை' என்பவை அவை. இங்கேயும் 'ஊகிக்கலாம்' என்ற குறிப்பு இருப்பினும், இரண்டு ஊகித்தல்களுக்கும் வேறுபாடு உண்டாம்.

சாமிநாதர் ஊகிப்பு, 'பெரும் பொருள் என்பது பெரும் பொருள் விளக்கம் என்னும் நூலாக இருத்தல் கூடும்' என்பது.

வையாபுரியார் ஊகிப்பு,'பெரும் பொருள் என்பது, ஒரு பொருளிலக்கண நூலாக இருத்தல் கூடும் என்பதுடன், அவ்விலக்கண நூலினை மேற்கோளுடன் விளக்கிய ஒரு நூல் பெரும் பொருள் விளக்கமாக இருக்கலாம் என்பதாம்.

பெரும் பொருளும், பெரும் பொருள் விளக்கமும் ஒரு நூலாகலாம் என்பது முன்னவர் ஊகம்.

'பெரும் பொருள்' இலக்கண நூல் என்றும், அதற்கு விளக்கமாக அமைந்த நூல் பெரும் பொருள் விளக்கம் என்றும் கருதியது பின்னவர் ஊகம்.

ருநூலாகக்

ஆனால் புறத்திரட்டின் வழியாலோ, நச்சினார்க்கினியர் வழியாலோ இரண்டு நூல்களும் தனித்தனி நூல்கள் என்றோ, ஒரே நூல் என்றோ உறுதி செய்யும் வாய்ப்பு இல்லை.

தமிழ் இலக்கண இலக்கியப் பரப்புகளில் 'விளக்கப் பெயர் நூல்கள் பலவாதல் எவரும் அறிந்ததே. (நாற்கவிராச நம்பி இயற்றிய) அகப்பொருள் விளக்கம், தமிழ் நெறி விளக்கம், இலக்கண விளக்கம் என்பனவும், நீதிநெறி விளக்கம் என்பதும் சான்றுகளாம். ‘அரும்பொருள் விளக்க நிகண்டு' என்பதால் நிகண்டு நூல்களும் அப்பெயர் பெற்றமை புலப்படும். இவற்றால் விளக்கமாக அமைந்த நூலும், அதன் உரையும் ஆகியவையோ, இரண்டும் கொண்டவை யோ 'விளக்கம்' என்னும் பெயர் பெறுவதை அறிய வாய்த்தலால்,