உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

-

இளங்குமரனார் தமிழ்வளம் 358

போன்ற பெயரீடு இன்றியும் தொல்காப்பியம், பொருளதிகாரம் என இருதிணைகளுக்கும் பொதுப்பெயர் கொண்டு வழங்கியமை போல, இரு திணைகளின் விளக்கமும் இருந்தமையால்தான் பெரும் பொருள் விளக்கம் என்னும் பெயரீடு பெற்றிருக்கக் கூடும். ஒரு பொருள் பற்றிக் கூறாமல், இருபொருள் பற்றிக் கூறுதலும், பெருமை என்பது இருமை என்னும் பொருளில் வழங்கப் படுதலும் அறிய இக்கருத்து வலியுறுவதாம்.

இனிப் பெருங்கதை, பெருந்தொகை, என்பன போலப் பாடல் பெருக்கம் பற்றிப் பெருமை சேர்க்கப்பட்டிருத்தலும் கூடுவதே. என்னெனின், ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பாடலேயன்றிப் பல பாடல்கள் கூறுதலும், புறத்தோன் குடை நாட்கோள், அகத்தோன் குடைநாட்கோள், புறத்தோன் நாட்கோள், அகத்தோன் வாள் நாட்கோள், புறத்தோன் வீழ்ந்த புதுமை, அகத்தோன் வீழ்ந்த புதுமை என்றாற்போலப் பெரும் பொருளில் வருவன நூல் விரிநிலையையும் விளக்கத்தையும் காட்ட வல்லனவாம்.

மேலும், படையியங்கரவம் என்னும் புறத்திணையியல் நூற்பா (3) விளக்கத்தில் 'இது முன் ஈரேழாம் என்ற துறை இருவகைப்பட்டு இருபத்தெட்டாம் என்கிறது' என்கிறார் நச்சினார்க்கினியர். இதற்கு

ஏற்ப,

'நிரை கோடற்கு எழுந்தோர் இயங்குபடை யரவம்' ‘நிரை மீட்டற்கு எழுந்தோர் இயங்குபடை யரவம்’

‘நிரை கோட்டற்கு எழுந்தோர் புடைகெடப் போகிய செலவு' ‘நிரை மீட்டற்கு எழுந்தோர் புடைகெடப் போகிய செலவு'

என இருபாற்பட இயலும். எடுத்துக் காட்டுகளை விரித்துச் செல்லுதல் எண்ணத் தக்கதாம். இனியர் காட்டும் இரண்டிரண்டு வெண்பாக்களில் ஒவ்வொன்று புறத்திரட்டினால் பெரும் பொருள் விளக்கத்தைச் சார்ந்ததென அறிய வருதலும் ஏனை ஒன்று இன்ன நூலைச் சார்ந்ததென அறிய வாரா திருத்தலும் அறியின் அவ்வேனை வெண்பாவும் பெரும் பொருள் விளக்கம் சார்ந்ததே என்னும் முடிவு செய்ய வாய்க்கின்றதாம்.

புறத்திரட்டில் அவ்வொண்பாக்கள் இடம் பெற்றிலவே எனின் தேர்ந்து திரட்டி வைக்கப்படும் திரட்டு நூலிலே நூல்