உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

99

முழுமையும் இடம் பெற்றிருக்கும் என நோக்குதல் கூடாதென்று அமைக. நூல் திரட்டு எனின் நூன் முழுமையும் இடம் பெற்றிருக்கும் என்றும் பாடல் திரட்டு எனின் தொகுப்பார் குறிப்புக்கு ஏற்ப அமைந்த பாடல்களே இடம் பெறும் என்றும் கருதுக.

இவ்விடத்தே குறிஞ்சிப் பொருள் கொண்ட பாட்டு குறிஞ்சிப் பாட்டு. அது பெருங்குறிஞ்சி எனப் பரிமேலழகராலும் (பரிபா. 1977) நச்சினார்க்கினியராலும் (தொல். அகத். 19) சுட்டப்படுதல்

எண்ணத்தக்கதாம்.

உரையாசிரியர் இளம்பூரணர் புறத்திணையியல் நூற்பாக் களுக்கு எடுத்துக் காட்டுகளைப் புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்தே காட்டுகிறார். அவர்க்குப் பின்னுரைகாரராகிய நச்சினார்க் கினியர் புறப்பொருள் வெண்பாமாலையை எடுத்துக்காட்டுவதுடன், பெரும் பொருள் விளக்க வெண்பாக்களையும் அதனை அடுத்தே எடுத்துக்காட்டுகிறார். மூன்றாம் நூற்பா ஒன்றில் மட்டும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்கள் பதினொன்றைனை நச்சினார்க்கினியர் காட்டினாராகவும் இளம்பூரணர் அவற்றுள் ஒன்றனைக் கூடக் காட்டாது செல்வதால் அவர் பார்வைக்கு வாராத சுவடியாகவோ, அவர் காலத்திற்குப்பின் தோன்றிய சுவடியாகவோ பெரும்பொருள் விளக்கம் இருந்திருத்தல் வேண்டும் என்று கொள்ள நேர்கின்றது.

இக்குறிப்பு, வேறு எவ்வுரையாசிரியராலும் நூலாசிரிய ராலும் சொல்லப் பெற்ற வாய்ப்பு இல்லாத நிலையில், இது தெளிவுறும் காலம் வரை, நச்சினார்க்கினியர் காலத்திற்கு முற்பட்ட வராகப் பெரும் பொருள் விளக்கம் நூலாசிரியர் இருந்திருத்தல் வேண்டும் என்றே கூற முடியும். இனிப் புறத்திரட்டைத் தொகுத்த காலம் அறியப் பெறினும் அதற்கு முன்னெல்லைப்படுத்த வாய்த்தல் கூடும். அத்தொகை செய்தார் எவர் என்றோ, அவர்காலம் இன்னதென்றோ அறியக் கூடா நிலையில் புறத்திரட்டில் இடம் பெற்ற நூல்களில் பின்னை நூலுக்குப் பின்னவர் அத்தொகை யாசிரியர் என்னும் பின்னெல்லை ஒன்றே காண முடியுமாம்.

புறத்திரட்டின் முதற்பதிப்பாசிரியர் வையாபுரியார், 'புறத்திரட்டிலே வந்துள்ள நூல்களில் காலத்தாற் பிற்பட்டது கம்பராமாயணமாகும். கம்பர் தமது அரும்பெரும் காப்பியத்தை 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றினரென அறுதியிடப்படு கின்றது. எனவே இக்தொகை நூல் 13ஆம் நூற்றாண்டிற்கும் 16ஆம்