உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் -35

நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப் பெற்றிருக்கலாம் எனக் கொள்ளுதல் தகும்' என்கிறார் (நூன்முகம் பக். 38)

'மேருமந்தர புராணப் பாடல் ஒன்று புறத்திரட்டில் இடம் பெற்றுள்ளது. இப்புராணத்தின் காலம் கி.பி. 1388க்கு முன்னாக இருக்கலாம் என்று ஆய்ந்து தெளிகின்றார்' அறிஞர் அருணாசலம். மேலும் அவர்,

14ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சிவாலய முனிவர், பொதிகையில் வாழ்ந்த முனிவர் ஒருவரால் 25 பதிகங்களைத் திரட்டி 'அகத்தியர் தேவாரத் திரட்டு' என்னும் பெயரால் வழங்கவிட்டார். அடுத்த 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த தத்துவராய சுவாமிகள் பெருந்திரட்டு குறுந்திரட்டு எனச் சாத்திரங்களில் இருந்தும் தேவாரத்தில் இருந்தும் தொகுத்தார். இத்தொகைகளுக்கு டைப்பட்ட காலத்தில் தோன்றிய தொகையாகப் புறத்திரட்டு ருக்கலாம் என்கிறார். (தமிழ் இலக்கிய வரலாறு. 15ஆம் நூற்றாண்டு 85-87)

இவை புறத்திரட்டின் தொகைக் காலமாகக் கருதப்பட்டவை, இவற்றைக் கொண்டு பெரும்பொருள் விளக்கக் காலத்தில் அறுதி யிட்டுச் சொல்ல இயலாதாம். அதன் திணை துறை வகுப்புகளையும் வெண்பாக்களின் நடை பொருளியல் என்பவற்றையும் நோக்க, புறப்பொருள் வெண்பாமாலை அடுத்தே தோன்றிய நூலாகலாம் எனக் கொள்ளலாம். வெண்பாமாலையை அடுத்தே புறத்திரட்டில் ஓரொழுங்காய் வைக்கப்பட்டுள்ள வைப்பு முறை அதற்குச் சான்றாகலாம். மேலும் முத்தொள்ளாயிர வெண்பாக்களுக்கு முற்பட அமைக்கப்பட்டமையும் கருதத் தக்கதாம்.

புறத்திரட்டில் வரும் பெரும் பொருள் விளக்கப் பாடல்கள் நாற்பத்து ஒன்றில் முப்பத்துதொன்பது பாடல்களை நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பதை அறிந்தோம். யானை மறம் பற்றிய பெரும் பொருள் விளக்கப் பாடல்கள் மூன்றனுள் ஒன்றை மட்டுமே இனியர் காட்டுதலால் இரண்டு பாடல்கள் அவர்தம் உரையில் இடம் பெறவில்லையாம். நாம் புறத்திரட்டினால் பெரும் பொருள் விளக்கப் பாடல்கள் என்பதை அறிந்து கொள்ள வாய்த்தமையாலேயே, நச்சினார்க்கினியர் காட்டியவை அப்பெரும் பொருள் விளக்கம் சார்ந்தவை எனக் காண வாய்த்துள்ள பேற்றை