உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 ஓ

இனிப் பாண்டிக் கோவை என்றொரு நூல் மீட்டுயிர்ப்புப் பெற்றுள்ளது. பெரும்பாலும் முழுதுறு நூலாகவே கிட்டியுள்ளது. எதனால்? ஒரோ ஒரு களவியல் உரையால் தானே 250 பாடல்கள் கிடைத்தன! அதன் பெயர் தானும் களவியற் காரிகை தந்ததுதானே! இவற்றை நோக்கப் பெரும் பொருள் விளக்கம் நச்சினார்க்கினியர் உரையால் கிடைக்கும் கொடையாகக் கொள்ளலாம்.

குறள் நெறியில் பெரும் பிரிவும் சிறு பிரிவும் அமைத்துக் கொண்ட புறத்திரட்டுத் தொகையாளர், தொல்காப்பியப் புறத்திணை இயலைத் தழுவியும் சில சிறு பிரிவுகளை மேற்கொண்டுள்ளார். அவை நிரைகோடல், நிரைமீட்சி, பகைவயிற் சேறல், பாசறை, எயில்கோடல், எயில்காத்தல், அமர், தானை மறம், யானைமறம், களம், வாழ்த்து என்பனவாம். இப்பிரிவுகளிலேதான் பெரும் பொருள் விளக்கப் பாடல்களை யைத்துள்ளார். இவற்றுடன் ஈகை, அறிவுடைமை, குடிமரபு என்னும் பிரிவு களிலும் சில பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புறத்திரட்டார் பெரும் பொருள் விளக்கப் பாடல்களை இத்தலைப்புகளில் வைத்தாராக. இப்பாடல்களை மேற்கோள் காட்டும் நச்சினார்க்கினியர் தொல்காப்பியத் துறையை நெறிப் படுத்திக் கூற்றும் குறிப்பும் விளக்கமும் சேர்த்துச் சிறக்கச் செய்கின்றார்.

சான்றாக எயில் கோடல் என்னும் பகுதியில் (அதி. 119) பெரும் பொருள் விளக்கப் பாடல்கள் 6 புறத்திரட்டில் இடம் பெற்றுள. அவை புறத்திணையியல் 12, 13ஆம் நூற்பாக்களின் உரையில் நச்சினார்க்கினியரால் காட்டப்பட்டுள்ள வகை வருமாறு:

புறத்திரட்டு-

பாடல்-

பகலெறிப்ப தென்கொலோ

1325

1326

- தொழுது விழாக் குறைக்கு

1327

-இற்றைப்பகலுள்

1328

-தாய்வாங்கு கின்ற

1329

வெஞ்சின வேந்தன்

1340

-

நக்காட்டும் புறத்துறை

இது புறத்தோன் குடைநாட்கோள் -இது புறத்தோன் வாணாட்கோள்

இது தொல்லெயிற்கு இவர்தல்

-இது புறத்தோன் மானங் காத்த நொச்சி

இது புறத்தோன் வீழ்ந்த புதுமை

தாக்கற்குப் பேரும்

இஃது தகத்தோன் வீழ்ந்த புதுமை

இன்னவாறு துறை கூறுவதுடன், கண்டோர் கூற்று, மறவர் கூற்று (புறத்திணை.3) எனக் கூற்றுவகையும் குறிக்கிறார்.