உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா:

2. பாநயம்

கட்டொழுங்கில் அமைவது பா: அதனால் யாப்பு, கட்டு, தொடை என்னும் பெயர்களையும் கொண்டது. அதன் இன்னோசைச் சிறப்பாலும் வயப்படுத்தும் திறத்தாலும் ‘பா' என்னும் பெயரைப் பெற்றது.பா என்பது பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை; அது தொலைவில் நின்று கேட்பார் செவியையும் உள்ளகத்தையும் ஈர்த்து வயப்படுத்துவதோடு அஃது இன்ன பாவகையினது என உணர்த்தும் ஓசைச் சிறப்பும் உடையது என விளக்கம் புரிவார் போராசிரியர்.

பாட்டின் செம்மை நலச் சீர்மையும் பயன் விளைவும் கண்டோர் அதனைச் செய்யுள் என வழங்கினர். ஆய்வார் ஆய்வு நலங்களுக் கெல்லாம் வைப்பகமாக அஃதிருத்தலின் 'தூக்கு' எனவும், எதுகை, மோனை, இயைபு என இன்னவாறாம் தொடர்புறுத்தங்களைக் கொண்டிருப்பதால் 'தொடர்பு' எனவும் பாட்டைப் பண்டையோர் வழங்கினர்.

பா: பாட்டு என்னும் பெயர்களோடு 'பனுவல்' என்பதும் ஒரு பெயராயிற்று; அது நூற் பெயரும் ஆயிற்று. பண்டு பாவின் வடிவே நூல்வடிவாக இருந்தமையால் பாட்டின் பனுவற் பெயரே, நூற் பெயரும் ஆயிற்றாம். பஞ்சு நூலுக்கும் பா நூலுக்கும் உள்ள தொடர்பை,

‘பஞ்சிதன் சொல்லா, பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக

மையிலா நூன்முடியு மாறு’

என்றது நன்னூல்.

இனிய பாக்களால் அமைந்த 'நூல் நயம்' தேர்தல் பண்டே

வழக்கில் இருந்தமை,