உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

'நவில் தொறும் நூல்நயம்' போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு’

என்னும் குறள் மணியால் இனிது விளங்கும்.

105

பாக்களுள் வேற்றுத்தளை விரவாத் தனிப்பெருஞ்சிறப்பினது வெண்பா ஆகும். அதன் ஓசையே செப்பல் ஓசை. வினாவுதலும் விடை கூறுதலும் என்னும் உரையாடலுக்கு ஏற்ற அமைப்புடையது செப்பல் ஓசை, இவ்வகையால் வெண்பா யாப்புத் தனிச்சிறப்பு டையதாய், பா வகைகளில் முதன்மை பெறுவதாயிற்று.

வெண்பா மனப்பாடம் செய்வதற்கு எளிமையும், வரப்படுத்திக் கொண்டு வெளியிடும் எளிமையும் உள்ளமையால், வெண்பா இரு காலில் (இருண்டு முறைகெட்ட அளவில்) கல்லானை (மனப்பாடமாக வரப்படுத்திக் கொள்ளாதவனை) ஒளவையார் இகழ்ந்து பாடினார். அவ்வெண்பா யாப்பே பெரும்பாலான அறநூல்களுக்கு இடமாயிற்று. நாலடி, பழமொழி முதலிய கீழ்க்கணக்கு நூல்களும் குறுவெண்பாட்டாம் திருக்குறளும் கருதுக.

முதற்பாவும் முதன்மைப் பாவும் வெண்பா ஆதலால் தான் வெண்பாவில் குறிய குறள் வெண்பாவால் நூலியற்றிய திருவள்ளுவர் முதற்பாவலர் எனப்பட்டார் என்பதையும் எண்ணுக.

இவ்வகைச் சிறப்புடைய வெண்பாவை மேற்கொண்டமையே நூல்நயம் ஓங்குதற்கு அமைந்த இயற்கை நிலையாகும். இனி, 'எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம்' என்னும் களவியல் வரலாற்றுக் குறிப்பால், பொருளிலக்கணச் சிறப்புப் புலப்படும். மேலும் அகநூல்கள் விரிந்து பரந்த அளவையும், புறநூல்கள் தேய்ந்து சுருங்கியமையையும் எண்ணின் புறப்பொருள் புகலும் நூல்களைப் பேணிக்காக்க வேண்டிய காவல் கடமையும் விளங்கும்.

புறத்திரட்டு வழியாகப் பெரும் பொருள் விளக்கம் பெறும் திணை துறைப் பகுப்புக்கும், புறத்திணையியல் நச்சினார்க்கினியர் உரை விளக்கத்தின் வழியே அறியப்படும் திணை துறை விளக்கங் களுக்கும் உள்ள வேறுபாட்டை அவ்வவ் வெண்பா உரைவிளக்கத் திலும், குறிப்புகளிலும் கண்டு கொள்க. இப்பெரும் பொருள் விளக்கப் பாடல்களைப் பெருந்தொகை எனப்படும் மதுரைத்