உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

107

கடைசி மூச்சு மட்டும் கலக்கம் இல்லானாய்க் களிப்புடன் போரிட்டு

அமரன் ஆனான்!

அவனொடு வந்தோர் அவனுக்கு அருகில் எவரும் இலர்!

தனியொருவனாக விழுப்புண் உடலுடன் வீழ்ந்து கிடக்க விட்டு வைத்தல் வீரர்க்கு விழுப்பமாமோ!

வீரனுக்கு வீரன் தானே உறவு! வீரன் வீழ்ந்த பின்னே பகையென்னும் வீம்பும் வெறுப்பும் தலைகாட்டின் அவன் வீரன் ஆவானா? இறந்த வீரனை இருந்த வீரர்கள் பகைப்படையன் எனப் பாராமல், அவனைக் கொன்றாரே உறவாக நின்றார்.

வீரவழிபாடு செய்வாராய், வாளைச் சுழற்றிச் சுழற்றி ஆடினார். இறந்தவன் புகழையெல்லாம் சொல்லிச் சொல்லி முழங்கினார். அவன் வீழ்ந்த களத்தில் அவன் காலடி மண்ணை அள்ளி எடுத்துத் தம் தலைக்குப் பூவெனச் சூடினார்.

இவற்றையெல்லாம் வேந்தன் கண்குளிரக் கண்டான். வீரர்களினும் விஞ்ச உவகை பூத்தான்.

இக் காட்சியைப் பெரும் பொருள் விளக்கம் பாடுகின்றது:

'ஆளும் குரிசில் உவகைக்கு அளவென்னாம் கேளின்றிக் கொன்றாரே கேளாகி - வாள் வீசி ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச்

சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து'

(23)

என்பது அது.

'பேராண்மை என்ப தறுகண் ஒன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு'

என்பார் திருவள்ளுவர். இப்படைச் செருக்குக் குறளின் மெய்ப்பிப்பு ப்பெரும்பொருள் விளக்க வெண்பா அமைந்துள்ளது.

ஆளுங் குரிசில் என்னும் வெண்பா புறத்திரட்டில் அமர் (121) என்னும் துறையில் இடம் பெற்றது (1348).இதனைப் புறத்திணை இயலில்