உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

‘களிற்றொடு பட்ட வேந்தனை அட்டவேந்தன் வாளோர் ஆடும்

அமலை'

என்னும் தும்பைத் திணைத் துறைக்கு எடுத்துக் காட்டாகக் காட்டுகிறார் நச்.

பகையால் கொன்றார், கொன்றபின்னரும் பகையாய் நின்றாரா?

ல்லை; அவர் கேளிராகி விட்டார்!

கேளிர் எவரும் இல்லாமலே கேளிராகி விட்டார்!

எவர் பகைவராக இருந்தாரோ அவரே உறவினராகி விட்டார்!

உறவினர் செய்யாச் சிறப்பெல்லாம் செய்து வீரவழிபாடு புரிந்தார்.

மெய்ம்மை வீரர் எப்படி இருப்பர்?

இவ்வீரர்கள் போல் இருப்பர்!

மெய்யாம் தலைவர் எப்படி இருப்பர்?

இக்குரிசில் போலவே உவந்து பாராட்டி மதிப்பவராக இருப்பர்! படைஞரும்

தலைவரும் கொள்ளும் உரிமைத் தொடர்பு எப்படியிருக்கும்?

பகையைத் தாக்குதலிலும், வென்று வீறு காட்டும் நிலையிலும் அறமும் அருளும் பேணுநராய்த் தலைமைக்குப் பெருமையும் பேருவகையும் சேர்ப்பர்! வள்ளுவர் வாய்மொழி வாய்மொழியாய்க் காட்டும் இப்பாட்டு, தமிழர் அறப்போர்ப் பண்பாட்டுச் சான்றாம்!

'யான் என்கண்ணால் ஈழவிடுதலைகாண விழைந்தேன். அதுகூடவில்லை. என் கண்கள் பறியுண்ணப்போகின்ற நிலையில் ஒன்று வேண்டுகின்றேன். அது என் கண்களைப் பார்வை இழந்தார்க்குக் கொடையாகக் கொடுத்தால், அவர் என் கண்ணால் விடுதலை ஈழத்தைக் காணும் பேறாவது வாய்க்கும்' என்ற பெருவீரன் குட்டி மணியின் கண்களை அவன் விருப்பப்படி செய்திருப்பின் பேராண்மையும் ஊராண்மையுமாகச் சிறந்திருக்கும்! அப்பேற்றைப் பெற வீரமுடையார்க்கு எத்தகைய அருளறப் பண்பாடு வேண்டும். அஃதில்லாக் கோழையர், மணியின் விழிமணிகளைத் தோண்டிக் கீழே வீசிச் செருப்புகளால் மிதித்தனர் என்னும் செய்தியை அறியும் போது கம்பர் உரைக்குமாறு 'செருப்படியில் பொடி யொவ்வா மானுடராக' அவர் இழிவுறுதலே வெளிப்படுகின்றதாம்.

‘ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்டாங்கிச்

சூடினார் வீய்ந்தானைச் சூழ்ந்து

"