உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

109

இதனை மனப்பொருளாக்க இரண்டு முறை ஓதிய அளவு போதும் தானே! பாட்டு என்பது சொல்லாலும் அமைப்பாலும், பொருளாலும் என்னை மனப்பாடம் செய்' எனத் தானே ஏவுவதாக இருக்க வேண்டும். அத்தகையதொரு பாட்டு இதுவாம்.

C

காட்டுக்கு மேயச் சென்ற பசு வீட்டுக்குத் திரும்புதலை நோக்கிய எதிர்பார்ப்பில், தவிக்கும் கன்றை நோக்கிய ஆயச் சிறுமியின் தவிப்பினை

‘சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்

நடுங்குசுவல் அசைத்த கையள்; கைய

கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள்'

ஆகக் காட்சி வழங்குதலை, முல்லைப்பாட்டு உளவியல் தேர்ந்து உரைக்கும் (12 - '6). இதோ பெரும் பொருள் விளக்கம் ஓர் அரிய காட்சியை வழங்குகின்றது.

பகைவர், பசுக்களைக் கவர்ந்து சென்று விட்டனர்!

'போருக்கு வா' என்பதன் அழைப்புத்தானே அது?

பொருள் இழப்பு என்ற அளவில் இப்பசுவைக் கவர்தல் ஆகாதே! அதனை மீட்டுக் கொண்டு செல்ல வில்லை என்றால், பெரிய மான இழப்பும் அல்லவோ ஆகும்!

அதனால் வெட்சி மாலை சூடிக் கவர்ந்து கொண்டு சென்ற பகைவரைத் தொடர்ந்து, கரந்தை மாலை சூடிக்கொண்டு பசுவை மீட்கச் சென்றனர். மீட்டும் திரும்பினர்! திரும்பிய பசுவையும் மீட்டித் திரும்பிய மகனையும் காண்கிறாள் அன்னை! அவள் உணர்வினைப் படமாக்கிக் காட்டுகிறது பெரும் பொருள் விளக்கம். 'காட்டகம் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையான்

மீட்ட மகனை வினவுறாள் - ஓட்டந்து

தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக் கலுழும் என்னெதிர்ப் பட்டாயோ என்று’

(8)

இப்பாடலை, நிரைமீட்சி என்னும் அதிகாரவைப்பில் தருகிறது புறத்திரட்டு (1249). 'நுவலுழித் தோற்றம்' என்னும்