உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

-

இளங்குமரனார் தமிழ்வளம் 35ஓ

புறநானூற்றைப் பயின்று திறம் பெற்றவர்க்கு அதன் மேல் நூலாகப் பதிற்றுப்பத்துப் பொருள் விளக்கமும், துறை விளக்கமும் கொண்டு தெளிவுற வாய்ப்பு உண்டு. ஆனால், பரிபாடல் அத்தகைய வாய்ப்புடையதன்று.

கலித்தொகைப் பாடல்கள் காதல் காட்சிகளாலும் பாலியல் அமைதியாலும் உரையாடல் தடை விடைப்போக்கு களாலும் பரிபாடலை ஒருசார் தழுவிச் செல்வதெனினும் சொல்லாட்சிகளும் செறிவு நிலையும் ஒப்பிட்டுக் காணும். ஒரு நிலையுடையதன்று. கலித்தொகையின் பளிக்குநீர் ஓட்டம், பரிபாடலோட்டத்தில் காண்டற்கு இல்லை. நின்றும் சுற்றியும் வளைந்தும் மயங்கியும் தயங்கியும் தாழ்ந்தும் எழுந்தும் ஓடும் ஓட்டம் பரிபாடல் ஓட்டம். ஆடு தாண்டும் காவிரி ஓரிடம்! அகல் நெடும் ஐயாற்றுக் காவிரி ஓரிடம்! இது பரிபாடல் நிலை!

பரிபாடல் சொல்லாட்சியும் செறிவும் என்பதினெட்டாம் அகவையிலேயே ஈர்த்து ஊன்ற வைத்தன. அதன் வையைப் பாடல்கள் 'வையை வளம்' என்னும் நூலுக்கு மூலவைப்பு

யின. இற்றை வாழ்வியலில் பரிபாடல் என்னும் பொழிவு இராசபாளையம், திருவள்ளுவர் மன்றச் சார்பில் செய்ய நேர்ந்தமை, முற்றான ஆய்வுக்கு முதலாயிற்று. இடை இடையே சொல்லாய்வுக்கும் ஒப்பீட்டுக்கும் உதவி நின்றது, பரிபாடல் அதன் செவ்வேள் பற்றிய பாடல்களைச் செவ்விதில் நோக்கி ஆய்வு நூல் ஆக்க மதுரைத் திருக்கோயில்சார் "திருப்புகழ் சபை" ஏந்தாயிற்று.

பேரன்பரும் பண்பில் தலைப்பட்டாரும் வள்ளலார் வழியே வாழ்வியலெனக் கொண்டவருமாகிய பெருந்தக்க வழக்கறிஞர் திருநகர் அ.கிருட்டிணசாமி அவர்களின் கெழுதகைமை நண்பின் வழியே கிடைத்த பெருமகனார் அரிமா பாலசுப்பிரமணியனார், அவர் இனிய முகத்தர்; கனிவின் அகத்தர்; பண்பின் கொள்கலர்; பணிவின் வடிவர்; முருகு வழிபாட்டில் முழுதுறு தோய்வர்! தொழிலொடு தொண்டும் துலங்க விரும்பும் தூயர்.அவர்தம் பேரன்பு, அரிமா அன்பர்கள் நடுவத்தில் ஒரு பொழிவுக்கு ஈர்த்தது. அவ்வீர்ப்புப் பெரிதும் வளர்ந்து மதுரைத் திருக்கோயில்சார் திருப்புகழ் மாமன்றத்தில் "பரிபாடலில் முருகன்" என்பது பற்றி யான் பேருரையாற்றத் தூண்டிற்று. அதற்கு முன்னின்றவரும் அப் பாலசுப்பிரமணியரே.

பரிபாடலில் முருகன் (செவ்வேள்) என்னும் இந்நூற் கைப் படியை ஆர்வத்தால் பார்த்து அளவளாவி ஊக்கிய பெரியவர்