உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

3

தமிழியற்புல ஆய்வாளர் திரு.வே. அண்ணாமலையார்! அச்சீட்டுக்கு முன்னரே ஓர் அறிஞர் பார்த்துக் கருத்துரைப்பது எத்துணை நலப்பாடு என்பதை, ஆய்வாளர் உலகம் கடைப் பிடியாகக் கொள்ளல் சிறக்குமெனப் பரிந்துரைத்துப் பாராட்டு கிறேன்!

இனி இப்பரிபாடல் பதினான்கு தலைப்புகளில் பகுத்து ஆயப்பெற்றுள்ளது. பரிபாடல் இலக்கணமும் செவ்வேள் பெயரமைதியும், செவ்வேளின் பிறப்புப் பற்றிய தொன்மக் குறிப்புகளும்,செவ்வேள் திருவுருவம் ஊர்தி முதலியன, வெற்றிப் பாடுகள், மணவாள நிலை ஆயனவும், செவ்வேளை வழிபடுவார் செலவு, வழிபடு நிலை, வேண்டுகை ஆயனவும், செவ்வேளைப் பற்றிய பாடல்களால் அறியவரும் கூடல், குன்றம் பற்றிய செய்திகள், கலை வளம், இயற்கை வளம், இறைமை மாட்சி, அந்நாளை மக்கள் பழக்க வழக்கம், நம்பிக்கை ஆகியனவும், செவ்வேளைப் பற்றிய பாடல்களில் அமைந்துள்ள சொல்லாட்சிகள் எதுகை வளம் கலைச் சொல்லாக்கம் என்பனவும் இதன்கண் ஆயப்பெற்றுள. இதன் வரிசையாகப் பரிபாடலில் திருமால், பரிபாடலில் வையை என்பனவும் தொடருமெனக் குறிக் கொள்கின்றேன்.

பொழிவுகள் பொழுதுபோக்கு அன்று என்னும் கருத்து பொழிவார்களுக்கு ஊன்றுதல் வேண்டும். அவ்வூன்றுதலின் வடிவாகத் திகழ்ந்தவர்கள் திரு. வி.க.; மறைமலையடிகள் ஆகியோர். அவர்கள் வழி, ஆக்க வழி என்பதை அமைப்புகளும் அறிஞர்களும் உணர்ந்து போற்றுதல் வாழ்வியல் நலமாகும்.

பொழிந்தது வழிந்து ஓடாமல் காப்பது அச்சீடேயன்றோ! கூற்றையும் ஆடல் கொள்வது இந்நாள் அச்சே! அச்சேற்றிய அருமையர் கழக ஆட்சியர் திருமலி இரா.முத்துக்குமாரசாமி அவர்களுக்குப் பெருநன்றியன்.

பாவாணர் ஆராய்ச்சி நூலகம், திருநகர், மதுரை-6.

தமிழ்த் தொண்டன், இரா. ளங்குமரன்