உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 35 ஓ

கிட்டிய இப்பரிபாடலையே எடுத்துக் காட்டாக உரையாசிரியர் களால் காட்ட நேர்ந்தது என்றும் கொள்ள வேண்டியுள்ளது.

இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்களின் கீழெல்லை 32 அடிகளாகவும், மேலெல்லை 140 அடிகளாகவும் அமைந்துள்ளன. இனிப் பரிபாடல் என்னும் பெயரைக் கருதுவோம்.

பரி :

பரிதல் என்பது ஓடுதல், விரைந்தோடுதல் என்னும் பொருளுடையது. குதிரையோட்டம், நீரோட்டம், காற்றோட்டம் என்பவை, இடம் காலம் சூழல் ஆகிய இவற்றுக்குத் தக்கவாறு, நெட்டோட்டம் சுழிப்போட்டம் வளையோட்டம் நிமிர் வோட்டம் தாழ்வோட்டம் அசைநிலை முதலியவற்றைக் கொள்ளல்போல

அடிவகையாலும் இசை வகையாலும் அமைந்து செல்லும் பாவகை பரிபாடல் என்பது தெளிவாகின்றது. 'ஓடிப் பரிதல்' 'ஓடிப் பரிந்து விட்டான்' என்னும் பொதுமக்கள் வழக்குகளும் இப்பொருளுக்குத் துணையாகின்றன.

இனி, அருவி கல்லெனக் கரைந்து வீழும் வீழ்ச்சியும், ஒல்லெனத் தவழும் தவழ்ச்சியும், மெல்லெனச் செல்லும் செலவும், அகன்று விரியும் அகற்சியும், குறுகி ஒடுங்கி விரையும் விரைச்சியும் அறிவார் பரிபாடல் நடையைப் புரிவார்.

'பரி' என்பதற்குப் புலம்புதல், விரைதல், வளைதல் சுழலுதல், உருகுதல், இரங்குதல் முதலிய பொருள்கள் வழங்குதலைத் தெளிவாக்கியும் கொள்வார்.

பாடல் பாவலர் :

-

எழுபது பரிபாடல்களில் திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, காளிக்கு 1, வையைக்கு 26, மதுரைக்கு 4 எனப் பாடல்தொகை இருந்தமையைப் பழம்பாடல் ஒன்று குறிக்கின்றது. முப்பத்தொரு பாடல்கள் செவ்வேளுக்கு இருந்தனவாக நாம் அறிந்தாலும், கிடைத்துள்ள பாடல்களில் செவ்வேளுக்கு வாய்த்தவை எட்டே எட்டுப் பாடல்கள் அவை : 5, 8, 9, 14, 17, 18, 19, 21 என்னும் எண்ணுடையன.

இவ்வெட்டுப் பாடல்களையும் பாடிய புலவர்கள் எழுவர். குன்றம் பூதனார் என்பார் மட்டும் இரண்டு பாடல் (9, 18) பாடியுள்ளார். பிறரெல்லாம் செவ்வேளைப் பற்றி ஒரு பாடல் பாடியவர்களே. அவர்கள் கடுவன் இளவெயினனார் (5)