உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

7

நல்லந்துவனார் (8) கேசவனார் (14) நல்லழுசியார் (17) நப்பண்ணனார் (19) நல்லச்சுதனார் (21) என்பார்.

இவ்வெட்டுப் பாடல்களுக்கும் பண்வகுத்தோர் நால்வர். கண்ணாகனார் (5, 21) மருத்துவன் நல்லச்சுதனார் (8,9,19) கேசவனார் (14) நல்லச்சுதனார் (17, 18) என்பார்.

இப்பாடல்கள் மூவகைப் பண்களில் இயல்கின்றன. அவை பாலையாழ் (5,8,9) நோதிரம் (14, 17) காந்தாரம் (18, 19, 21)

என்பன.

கேசவனார், தாம் பாடிய பாடலுக்குத் தாமே இசையும் வகுத்துள்ளார். நல்லச்சுதனார் தாம் பாடல் பாடியதுடன், நல்லழுசியார் பாட்டுக்கு இசையும் வகுத்துள்ளார். மருத்துவன் நல்லச்சுதனார் மருத்துவத் திறத்துடன் இசைத்திறமும் வாய்ந்த வராகத் திகழ்கின்றார். புலவர்களுள் நால்வர் 'நல்' அடையுடன் சுட்டப்பெறுவது கருதத் தக்கது. இவருள் சிலர் திருமாலையும் பாடி உள்ளனர் என்பதை எண்ணின் இவர்கள் சமயச் சால்பு விளங்கும்.