உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் சிவப்பு :

பரிபாடலில் திருமுருகன்

9

திருமுருகன் உடல் வண்ணம் மட்டும் செஞ்ஞாயிற்று வண்ணம் அன்று. அவன் உடுப்பதும் எடுப்பதும் செவ் வண்ணமே என்பதைத் தெளிவாகக் காட்டுவது முன்னே சுட்டிய குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து.

"தாமரைபோலும் சிவந்த அடி; பவழம் போலும் மேனி; கதிரொளிபோலும் ஒளி; குன்றிமணி போலும் உடல்; செஞ்சுடர் போலும் வேல்; செங்கொண்டைச் சேவல், கொடி; இவற்றைக் குறிக்கிறது. அப்பாட்டு.சிவப்பாக அமைந்த ஒவ்வொன்றன் வண்ணத்திற்கும் சிவப்பாக அமைந்த சீரிய பொருள்களையே தேர்ந்து தேர்ந்து அமைத்த திறம் எண்ணி மகிழ்வதற்குரியது. அடுத்ததாக வரும் குறுந்தொகை முதற் பாடல் 'செங்களம்' படக் கொன்ற சீர்த்தியையும், செங்கடம்பு சூடிய நேர்த்தியையும் விளக்கும் இதனைப் பரிபாடல் பல IL ங்களில் அருமையாகப் பாடுகின்றது.

'சேய்' என்றும் 'செவ்வேள்' என்றும் முருகனைக் குறிக்கும் முதற்பாடலிலேயே (பரி.5) "ஞாயிற்று ஏர்நிறத்தகை" என்பதும் இடம் பெறுகின்றது. முருகாற்றுப்படை நக்கீரனாரின் காட்சி, பரிபாடல் இளவெயினனாரின் காட்சியாகவும் திகழ்தலை உணர்ந்து மகிழ வாய்க்கின்றது.

அன்றியும் பதினெட்டாம் பரிபாடல்

"வெண்சுடர் வேல்வேள் விரை மயின்மேல் ஞாயிறு' என்று பாராட்டுகின்றது.

வெண்ணிற ஒளியுடைய வேல் ஏந்திய செவ்வேளே! விரைந்த செலவினையுடைய மயில்மேல் ஏறிவரும் செஞ்ஞாயிறே!" என்பது இத்தொடரின் பொருளாதல் அறிக.

மேலும் பத்தொன்பதாம் பரிபாடல், செவ்வேளின் உடை, மாலை, படை, உருவம், முகம் இன்னவும் செவ் வண்ணமாகத் திகழ்தலை விளக்குகின்றது.

“உடையும் ஒலியலும் செய்யை; மற் றாங்கே படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்; உருவும் உருவத்தீ ஒத்தி; முகனும்

விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி”

என்பது அது. "பெருமானே நீ உடையாலும் மாலையாலும் சிவந்த நிறமுடையை; ஆங்கே வேற்படையும் அந்நிறத்திற்கு ஏற்பப் பவழக் கொடிபோலும் நிறம் கொள்ளும்; திருமேனி