உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

நிறத்தாலும், சுடர்விட்டு எரியும் செந்தீ வண்ணத்தை ஒப்பாக உடையை; திருமுகமும் காலையில் தோன்றும் இளங்கதிரின் ஒளி ஒத்தது" எனச் செவ்வேளின் செவ்வியல் காட்சிகளை உளமுறக் கூறுகின்றது இப்பகுதி.

இனி, இருபத்தொன்றாம் பரிபாடல் செவ்வேள் ஏறிய யானையின் நெற்றிப் பட்டம், செந்தீக்கனன்றெரிவது போன்ற தென்றும், அவன் திருவடியில் பூண்ட அடையல் (செருப்பு) அவன் செந்தாமரை அன்ன அடிக்கு ஒத்த வண்ணத்ததாகத் துவர்ப்பதனிட்டுப் பவழவண்ண மூட்டப் பட்டது என்றும் கூறுதல் அழகுக்கு அழகாவதுடன் ஒத்தியல் நோக்கில் எப்படி யெல்லாம் பண்டைப் புலவர்கள் ஒன்றியுள்ளனர் என்னும் வியப்பும் மிகுகின்றது.

'சேய்' என்பது 'சேஎய்' என அளபெடை பெற்று வருதல் உண்டு. சேய் என்னும் ஓரசைச் சொல்லை அளபெடையால் ஈரசை இயற்சீராக்கல் புலவர் நெறி. 'ஆய்' என்பான் 'ஆஅய்' எனப் புறப்பாடல்கள் பலவற்றில் சுட்டப்பெறுதல் இதற்கு எடுத்துக்காட்டாம். தொல்காப்பியர் 'சேயோன்' என ஒன் ஈறு இயைத்துக் கொண்டமையால் அளபெடையாக்கும் தேவையைத் தவிர்த்துக் கொண்டார் என்க.

சேய் மகவு :

இனிச் 'சேய்' என்பதற்கு 'மகவு' என்னும் பொருளுண்மை எவரும் அறிந்தது, தாய் சேய் நலவிடுதி என்னும் இக்காலப் பெயரீட்டில் சேய் பயன்படுத்தப்பட்டுள்ளமை பரிபாடலால் அறியவருகின்றது, அது,

“கால்அய் கடவுள்சேஎய், செவ்வேள்”

என்பதாம் (5:13) உலகத்தை அழிக்கும் தொழிலைக் கொண்ட சிவபெருமானின் திருமகனே, செவ்வேளே என்னும் பொருள மைந்த இத்தொடரால் சேய் என்பதன் மகன்மைப் பொருள் தெளிவாம். இதனை ஊன்றி நோக்கினால் செங்கதிரோனைச் சிவனாகவும், அக்கதிரின் செவ்வொளியைச் செவ்வேளாகவும் பண்டையோர் கருதினர் என்றும், செஞ்சுடர் தந்த ஒளி, செவ்வொளி ஆதலால் அச் செஞ்சடரின் மகனாகச் செவ்வேளைக் குறித்தனர் என்னும் இயற்கையொடு பொருத்தி இயைவுகாண வாய்க்கின்றதாம்.