உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

வேலன் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

'சேய் என்னும் செவ்வேளுக்கு வேலன் என்பதொரு பெயர். அதுவும் முருகனைப் பற்றிக் கூறும் நூல்களிலெல்லாம் பெரிதும் விளங்கும் பெயரே. படைவீடு என்று பின்னாளில் வழங்கிய பெயரும் 'வேல்' வைத்து வழிபட்டதால் ஏற்பட்டதே. 'படை' என்பது கருவி என்னும் பெயராதலும், படைவைத்த இடம் 'படைவீடு' 'படைக்கலக் கொட்டில்' எனப்பட்டதும் பழமையான வழக்குகள்.

வேல் :

'சேய்' என்னும் செவ்வேளுக்கு 'வேலன்' என்பதொரு பெயர். அதுவும் முருகனைப் பற்றிக் கூறும் நூல்களிலெல்லாம் பெரிதும் விளங்கும் பெயரே. படைவீடு என்று பின்னாளில் வழங்கிய பெயரும் 'வேல்' வைத்து வழிபட்டதால் ஏற்பட்டதே. 'படை' என்பது கருவி என்னும் பெயராதலும், படைவைத்த டம் 'படைவீடு', 'படைக்கலக் கொட்டில்' எனப்பட்டதும் பழமையான வழக்குகள்.

வேல் :

போர்க்கருவிகளுள் பழங்காலத்தில் சிறப்பு மிக்கதாக விளங்கியது வேலேயாம். வேல், யானைப்போர்க்கு உரியது. "கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் என்பது திருக்குறள். "வேலாண் முகத்த களிறு" என்றும் வரும்.

கானமுயலெய்து வெற்றிதந்த அம்பினும், களிற்றின்மேல் ஏவப்பட்டு வெற்றிதராத வேலே எனினும் அதுவே பெருமைக் குரியது என்றும் திருக்குறள் கூறும்.

வேலடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடமை என்றும், களிறு எறிந்து வீழ்த்துதல் காளையர்க்குக் கடமை என்றும் புறப்பாடல் தெளிவிக்கும். இவற்றை நோக்க வேலின் சிறப்பு வெள்ளென விளங்கும்.

முல்லை,மருதம், நெய்தல் நிலங்களினும் குறிஞ்சி நிலமே யானை வளம் இயற்கையாக உடையது. விலங்கின் அச்சமும் மிக்கது. ஆங்குத்தான் வளப்பெருக்கும் இயற்கையாக வாய்ப்பது; ஆங்கேதான் ஆதி மாந்தனின் வாழ்வும் தோற்றமுற்றது. ஆகலின், ஆங்கு வாழ்ந்தவன் வேலைக் கொண்டிருப்பதும் வேற்போர் புரிவதும், வேல்வழிபாடு செய்வதும் இயற்கையோடு பொருந்தி யவை. அவ்வாறு வேலைக் கொண்டு ஆடிப்பாடி விழா