உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

13

எடுத்தவன் வெறியாடியவன் - வேலன் எனப்பட்டான். 'வேலன் வெறியாட்டு' என்பது குறிஞ்சி நில வழக்காறு.

முருகன் பிறப்பு

முருகன் பிறப்புப் பற்றிய செய்தியை வெறியாடும் வேலன் கூறுகிறான் (5.15). பிறரும் கூறுகின்றனர்; அவர்கள் கூற்றை உட் கொண்டு, அல்லது அவர்கள் கூறுவதாகப் படைத்துக்கொண்டு முருகன் பிறப்புச் செய்தியைக் கடுவன் இளவெயினனார் பாடுகின்றார்; பிறரும் பாடுகின்றனர்.

"முப்புரங்களை அழித்த இறைவன் இறைவியோடு கூடி இன்புறும்போது உண்டாகிய கருவைச் சிதைக்குமாறு இந்திரன் வேண்டிக் கொண்டான். அப்படியே பல துண்டங்களாக்கினான் இறைவன். அத்துண்டங்களைப் பெற்றுக் கொண்ட இந்திரன், முனிவர் எழுவரிடத்து வழங்கினான். அவர்கள் தம் முழுதறிவால் இவன் தேவர் படையின் தலைவனாவான் என்பதை அறிந்து வேள்வித் தீ வளர்த்து அதில் பெய்தனர். அத்தீக் கொண்டது போக எஞ்சியதை அருந்ததி ஒழியக் கார்த்திகைப் பெண்கள் அறுவரும் உண்டு சூற் கொண்டு சரவணப் பொய்கையில் தாமரை மலர்ப்படுக்கையில் ஈன்றனர். இந்திரன் மீளவந்து வச்சிரப் படையால் முருகனை ஆறுகூறாகச் சிதைத்தும் ஓருருவாகத் திகழ்ந்தனன். தன் வறுங்கை கொண்டே அக்குழந்தைப் பருவத்திலேயே இந்திரனை வெற்றி கொண்டனன். அதனால் இவனே நம்படைக்குத் தலைவன் என்று மகிழ்ந்து தேவர்கள் மறி, மயில், சேவல், வில், தோமரம், வாள், ஈட்டி, கோடரி, மழு, கனலி, மாலைமணி ஆகியவற்றைப் பரிசாக வழங்கினர். அவற்றைத் தன் பன்னிரு கைகளிலும் கொண்டான். இச்செய்தி,

"நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை” என்றும் (8:16)

மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ"

என்றும் சுருங்கிய அளவாலும் (9:7) உரைக்கப்படுகிறது. ஆரல் என்பது கார்த்திகை. இவண் கார்த்திகைப் பெண்டிர் அறுவரைக் குறித்தது. முருகன் பிறப்பைப் பற்றிய இச்செய்தியைத் திரட்டி யுரைக்கும் பரிபாடல் பழைய உரையாசிரியர் பரிமேலழகர் "பௌராணிகர் சொல்லுவர்" என்கிறார். பௌராணிகராவார் பௌராணிகர். இனிக் கார்த்திகை மகளிரைச் சுட்டாமல் உமையம்மை தந்ததாகவும் பரிபாடலில் குறிப்புளது. அது, மறுமிடற்று அண்ணற்கு மாசு இலோள் தந்த ... கடம்பர்