உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

செல்வன்” என்பது அது. மாசு இலோள் என ஒருமையில் வந்தது அறிக. (8:126-7).

இவ்வாறு புராணக் கதையைப் பற்றி எழும் சிக்கலைப் பரிபாடல் சொற்பொழிவு நூலில் பேரா ந.சேதுரகுநாதனார் குறிக்கிறார், அக்குறிப்பு இவண் எண்ணத்தக்கது:

"வீட்டில் பின்பக்கத்துத் தோட்டத்திலே வளர்ந்திருக் கின்ற முருங்கை, அதன் மேல் ஏறி ஊஞ்சலாடுவதற்காக நிற்கின்றது என்று கருதி ஒருவன் ஏறி ஊஞ்சலாடி விழுந்து முருங்கையைக் குற்றம் கூறினான் என்றால், அது முருங்கையின் குற்றமாகாது. முருங்கையின் இலைகளையும் காய்களையும் கொண்டு பயன் துய்ப்பதே முறையாகும். முருங்கையின் அடிமரத்திலே அப்பிக் கிடக்கும் கம்பளிப்பூச்சியை மார்புடன் அணைத்துக்கொண்டு உடம்பின் பசபசப்புத் தாங்காமல் அலறும் ஒருவனைப் போன்று பரிபாடலினுள் விரவிக் கிடக்கும் புராணக் கதைகளை அலசிப் பார்த்து ஆராய்ந்து அலறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. கதைகளினால் குறிப்பிட்டு உணர்த்தக்கருதிய குறிக்கோள் எதுவென்று கருதி அன்பு செய்தலே செய்தற்குரிய செயலாகும். ஆராய்ச்சிக்காகக் கையாண்ட கதைகள் அல்ல அவை என்பது அது (பரிபாடற்சொற்பொழிவுகள் பக்.9).

தொன்மக் குறிப்புகள் :

செவ்வேள் பிறப்புப் பற்றிய இவ்விடத்திலேயே அறியத் தக்க சில தொன்ம (புராணச்) செய்திகளும் உள. அவற்றுள் ஒன்று: முப்புரம் எரித்தது.

மறையைக் குதிரையாகவும், புவியைத் தேராகவும் நான்முகனைத் தேர்வலவனாகவும், பனிமலையை வில்லாகவும், வாசுகிப் பாம்பை அம்பாகவும் கொண்டு வெள்ளி பொன் இரும்பு என்னும் முப்புரங்களை அழித்தான் இறைவன்" என்பது அக்கதை. இதனை

ஆதி அந்தணன் அறிந்துபரி கொளுவ, வேத மாம்பூண் வையத்தேர் ஊர்ந்து, நாகம் நாணா, மலைவில் லாக

மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய

மாதிரம் அழல எய்து”

என்கிறது பரிபாடல் (5:22-26)