உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. செவ்வேள் உருவும் திருவும்

"செவ்வேள்' 'சேய்' சேஎய் என்பவற்றை முன்னர்க் கண்டுள்ளோம். அப் பெயர்க்குத் தகச் செவ்வண்ண மேனியும் செவ்வண்ண உடை முதலிய இயைவும் கண்டோம். இவண் செவ்வேள் திருமுகம் முதலிய உருவும், ஊர்தி கலம் முதலிய திருவும் பற்றிப் பரிபாடல் வழியே அறியப் பெறுவனவற்றைக் காண்போம்.

-

தலை கை :

ஆறுமுகம் (சண்முகம்), பன்னிருகைப்பெருமாள் என மக்களுக்குப் பெயர்கள் வழங்குகின்றன. இவை முருகன் தலை, கை பற்றிய மக்கள் கருத்தை வெளிப்படுத்துகின்றன. பரிபாடல், "அறுமுகத் தாறிரு தோள்"

என்றும் (14:21)

ஆறிரு தோளவை ஆறுமுகம் விரித்தவை என்றும் (21:67) கூறுகின்றது. மேலும்,

மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள் என்றும் (5:11) “ஆறிரு கைக்கொண்டு"

என்றும் (5:68) கூறுகின்றது. கயந்தலை என்பது, மெல்லிய தலை; இளமையாம் தலையைக் கயந்தலை என்பர். கன்று கயந்தலை என்பது உலகியல் வழக்கில் உள்ள இணைமொழி.

66

“முகனும், விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி”

என்று (19:100) முருகவேள் முகம் இளவள ஞாயிற்று வண்ணமும் வனப்புமொத்து விளங்குதலைத் தெரிவிக்கின்றது பரிபாட்டு.

ரு

முருகவேளின் பன்னிரு கைகளிலும் வெள்ளையாட்டு மறி, மயில், சேவல், வில், தோமரம், வாள், ஈட்டி, கோடரி, கணிச்சம், மழு, மாலை, மணி என்பவை உள்ளன என்றும், அவற்றுள் அனலன் சேவலையும் இந்திரன் மயிலையும், கூற்றுவன் வெள்ளையாட்டு மறியையும் கொடுத்தனர் என்றும்,பிறபிற தேவர்கள் பிறபிறவற்றை வழங்கினர் என்றும் பரிபாடல்