உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

17

கூறுகின்றது. (5:57 - 69) திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா ஆகியவற்றில் இச்செய்தி வேறுவகையாகக் கூறப்படுவதை ஆங்குக் கண்டு கொள்க.

ஊர்திகள்

முருகன் யானை ஊர்தியை உடையவன் என்றும் அவ்யானை 'பிணிமுகம்' என்னும் பெயரது என்றும் பரிபாடல் பலபடக் கூறுகின்றது.

"சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கி” (5:2)

"பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ" (17:49)

என்பவற்றைக் கருதுக. மேலும் முருகனை வழிபடுவோர் வழங்கிய பொருள்களுள் பிணிமுகமும் இருந்தமை,

"பிணிமுகம் உளப்படப் பிறவும் ஏந்தி”

என்பதால் (8:101) விளங்கும். நேர்த்திக் கடனாக இறைவனுக்குப் படையல் செய்வது இன்றுமுள்ள வழக்குத்தானே. அவ்வழக்கில் பண்டே பிணிமுகம் (யானை) இடம் பெற்றுள்ளது.

பிணிமுகம் என்னும் பெயர் சுட்டாமல், ஊர்ந்ததை வேழம்' என்று சுட்டிய இடமும் (21:1-2) உண்டு, மயிலூர்தி முருகனுக்கு அக்காலத்துச் சொல்லப்பட்டிலதோ எனின், முருகன் "வெண்சுடர் வேல்வெள் விரைமயின் மேல் ஞாயிறு" என்று பாராட்டப்பட்டுள்ளமையால் (18:26) அவ்வூர்தியும் உண்மை புலனாம். அதன் அடுத்த அடியிலேயே அவன் “ஒண்சுடர் ஓடைக் களிறு" என யானை யூர்தியும் சொல்லப்பட்டுள்ளமை யால் ஈரூர்திகளும் உடைமை இனிதின் விளங்கும்.

கொடி

திருமுருகன் கொடி 'புட்கொடி' என்கிறது பரிபாடல் (17:48) "புட்கொடி, கோழிக்கொடி என்பது பரிமேலழகர் உரை. இவண் கோழி என்றது சேவற் கோழி. "சேவலங் கொடியோன் என்பது முன்னருங் கண்டது. அக்கொடி, ஊர்தியாகிய யானையின் மேல் பிடிக்கப்பட்டிருந்தது என்பதும் பரிபாடலால் விளங்குகின்றது (19:91)

மாலை :

முருகன் அணிந்த மாலை கடம்பு என்பது பரிபாடலால் விளங்குகின்றது. "உருளிணர்க் கடம்பின் ஒலிதாரோயே (5:81) உருளிணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ்தார்" (21:10) என்பவை அவை. ஒலிதார், தழைத்து நீண்ட மாலை. அதன் வடிவும்