உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

வனப்பும் விளங்க 'உருள் இணர்' என்றார். உருட்சியும் திரட்சியும் உருள் இணர் என்பதால் விளங்கும். தேர் உருள் போல்வதென உவமைப் படுத்தலும் உண்டு (முருகு 11 நச்). 'ஒலிதார்` என்பது 'ஒலியல்' எனவும் ஆட்சி பெறும் (பரி. 19:97) ஒலியல் என்பதற்குக் கடப்பமாலை என்பது உரை.

கடப்பந்தாரைச் சூடிய முருகன், திருப்பரங்குன்றில் அமர்ந்ததும் கடம்பே என்பதும் பரிபாடல் செய்தி. 'குருகு பெயர்க் குன்றத்தை (கிரௌஞ்சத்தை) உடைத்த முருகனை நீ இக்குன்றத்தில் கடம்பின்கண் அமர்ந்த அழகு நிலையைப் பாராட்டுகிறோம்" என்கிறது. அது (19:104). மேலும் பரிபாடல், உருளிணர்க் கடம்பின் நெடுவேள்" என்றும் (21:50), "கடம்பமர் செல்வன்" என்றும் (8:126) சிறப்பிக்கின்றது.

படை :

செவ்வேளின் பன்னிரு கைகளிலும் படையும் கொடியும் பிறவும் இருப்பினும் வேலுக்குத் தனிச் சிறப்புண்மை அறியத் தக்கது. குன்றங்கொன்ற குன்றா ஆண்மைச் சான்றாக அது விளங்குவது அதன் காரணமாம். படை என்பதே வேற்படையைக் குறிப்பதாயிற்று. அதன்நிறம் ஒள்ளொளிய தெனினும் பவழக் கொடியின் நிறமென உவமை காட்டப்படுகின்றது.

"படையும் பவழக் கொடிநிறம் கொள்ளும்'

என்றார் பரிபாடலார். பகையழிப்பில் பவழ வண்ணவேல் எனப்படும் அது, அடியார் திறத்து அருள் பாலிக்குங்கால் அச்ச மூட்டும் அந்நிறத்தைக் கொண்டிராது என்பதை உணர்த்து வார்போலப் பழைய உரையாசிரியர் "நின்வேலும் அவ்வாறே பவழக்கொடி நிறத்தைக் கொள்ளும்" என முற்சுட்டிய அடிக்கு உரைவரைந்து அதன் விளக்கமாக, குருதி தோய்ந்துழியல்லது அந்நிறம் இயல்பன்மையிற் கொள்ளும் என்றார் எழுதினார்.

கையதை, கொள்ளாத் தெவ்வர்கொண் மாமுதல் தடிந்து புள்ளொடு பெயரிய பொருப்புப்படை திறந்த வேல்"

என

என்று வரும் செய்தி (21:9-10) பன்னிருகைகளும் ஏந்திய கருவி களை விலக்கி, ஒருகைவேலை உயர்த்திய பெருமை காட்டுவதாம். வேலன் திருப்பெயர் வேல் வழிவந்ததுதானே.