உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. செவ்வேளின் வீறு

"கருவிலே திரு என்பது பழமொழி. "கருவிலே திறம்" என்பதை மெய்ப்பிப்பது செவ்வேளின் வீறு.

பிறந்த நாள் வெற்றி :

“பிறந்த ஞான்றே நின்னை உட்கிச்

சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே"

என்கிறது பரிபாடல் (14:25-26)

<<

'தாமரைப் படுக்கையில் பிறந்த அந்நாளிலேயே வச்சிரப் படை கொண்டுவந்த இந்திரன் முதலியோர் அச்சமுறுதற்குக் காரணமான சிறப்புடையவனே" என்பது அவன் பிறந்த நாள் வீறு விளக்குவதே!

வறுங்கை வெற்றி :

இதனினும் அவ்வீறு இருந்த வகையை விளக்கிக் காட்டுவது போல் அமைந்தது, அவன் வறுங்கை கொண்டே தன் பகையை ஓடச்செய்த பெருவீறு ஆகும்.

'ஓங்கு விறற் சேஎய்,

ஆரா உடம்பினீ அமர்ந்துவிளை யாடிய போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய'

என்கிறது பரிபாடல் (5:54-56).

-

ஆரா உடம்பு என்பது நிரம்பாத வளராத உடம்பு பிறந்த நிலையில் இருந்த உடம்பு. அமர்தல் - விரும்புதல்; விளையாடிய போர் - விளையாட்டுப் போலச் செய்த போர்: வறுங்கை - படைக் கலம் ஏந்தாத வெறுங்கை. புரந்தரன் - இந்திரன். உடைதல் தோற்றோடுதல்.

"பிறந்த அப்பொழுதே விரும்பி விளையாட்டாகச் செய்த நின் வறுங்கைப் போர்க்கு ஆற்றாமல் இந்திரன் தோற்றோடுமாறு