உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 35ஓ

செய்த உயரிய வலிமை வாய்ந்த செவ்வேளே" என்று விளித்துப் பெருமிதம் கொள்கிறார் புலவர்.

பிறந்தபொழுதே செய்த போர் விளையாட்டாகச் செய்த போர் - படையொடு வந்த வலியவனை வறுங்கை கொண்டே தோற்றோடச் செய்த போர்- என மூன்றுமடி வீறு காட்டி விளக்கிய புலவர், அதன்மேலும் பேராண்மை ஒன்று காட்டுகிறார்.

பகைவரும் பாராட்டும் வெற்றி :

பகைத்து நின்றோனும், அவனைச் சார்ந்து வந்தோரும் பகைவன் என்றும் பாராமல், முருகன் வெற்றிச் சிறப்புக்குப் பெரிதும் மகிழ்ந்து, "எமக்குத் தலைமை தாங்கவல்ல காவற் பெருமகன் இவனே! இவனைத் தலைவனாகக் கொண்டால் எமக்கு அல்லல் அறவே இல்லை எனத் துணிந்து வழிபட்டுப் பரிசு வழங்கிப் பாராட்டியதாகும் அது. எதிரிட்டு நின்றவரே ஏத்துமாறும் தலைவனாக ஏற்குமாறும் அமைந்த வீறு அருமை மிக்கதேயன்றோ!

இந்திரனை வென்ற செய்தி இவ்வாறமையச், சூரனை வென்ற நிகழ்ச்சியைப் பரிபாடல் வழியே அறிவோம், சூர்மா தடிதல் :

சூரன், 'சூரபன்மா' என்பான். அவனை 'மா' என்பதும் புலவர் நெறி. பரிபாடற் பாவலர்கள் 'மா' என்பதையே பெருக வழங்கியுள்ளனர். 'சூர்மா' என இணைப்பதும் 'சூர்' எனச் சுருக்குவதும் அவர்கள் வழக்கே.

"நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து” (5:4)

"கடுஞ்சூர் மாமுதல் தடிந்து" (9:70)

"சூர்மருங் கறுத்த சுடர்ப்படை" (14:18)

"சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்" (18:4)

"எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து" (19:101) "கொள்ளாத் தெவ்வர்கொள் மாமுதல் தடிந்து" (21:8) "மாதடிந் திட்டோய் (21:28)

சூரபதுமன் என்பவன் மாமர வடிவில் நின்றான் என்பது தொன்மச் செய்தி. ஆகலின், 'சூர்மா' 'மா' என வழங்கினர், சூரபதுமன் ஆகிய மாமரத்தை வேரொடும் சாய்த்து என்பதே