உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

21

மாமுதல் தடிந்து என்பதன் பொருள். முதல் என்பது வேர். வேரை வெட்டினால் அடி சாய்ந்து மரம் அழிவது உறுதிதானே! மாதபுத்த என்பதும் இப்பொருளதே. தபுத்தல், அழித்தல்.

சூர்மா துன்புறுத்திய கொடுமை விளங்குமாறு."நோயுடை நுடங்குசூர்” “கடுஞ்சூர்" "எவ்வத்து ஒவ்வாமா" "கொள்ளாத் தெவ்வர் கொள்மா" என்றெல்லாம் அடைமொழி தந்து புலவர்கள் தம் கருத்தை விளக்கினர். வேலால் தடிந்தான் என்பதை வேலோய் சுடர்ப்படை என்பவற்றால் கூறினர்.

வரையுடைத்தல் :

சூர்மா தடிந்ததுபோலச் செவ்வேள் வீறுபற்றிக் கூறும் மற்றொரு செய்தி 'வரையுடைத்தல்' என்பது. மலையின் பெயர் 'கிரௌஞ்சம்' என்பது. கிரௌஞ்சம் தமிழில் 'குருகு' என்று சொல்லப்படும். இது பறவையின் பெயராயினும் மலையைக் குறிப்பதால் 'குருகு பெயர்க் குன்றம்' என்று தெளிவுறுத்தப் படுகின்றது.

"குருகொடு பெயர் பெற்ற மால்வரை யுடைத்து மலையாற்றுப்படுத்த”

என்கிறது ஐந்தாம் பரிபாடல் (9-10). குருகு, பறவை என்றோம். 'புள்' எனினும் பறவையே. அதனால், "புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்தவேல்' என்கிறது இருபத்தொன்றாம் பரிபாடல் (9) குருகெறி வேலோய் என்கிறது பத்தொன்பதாம் பாடல் (36).

இனிப் பெயர் குறியாமல் “குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்" என்று சொல்லவும் படுகின்றது (8:29). வேலால் வேலன் தகர்த்த குன்றம் இன்னதெனப் பலரும் அறியுமளவில் கதை வழக்கு வழங்கியது என்பது இதனால் தெளிவாகின்றது. 'குன்றுபக எறிந்த அஞ்சடர் நெடுவேல்" என்பது பெருந்தேவனார் பாட்டு (குறுந்.)

குன்றத்தை உடைப்பானேன்? அல்லது துளைப்பானேன்? இதற்குப் பரிபாடல் விளக்கம் தருகின்றது. அது.

“மலையாற்றுப் படுத்தல்"

என்பது."வரையைத் துளைத்து அதனை வழிப்படுத்தின" என்பது பழையவுரை (பரிமேலழகர் உரை). "மலையினைக்