உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 35 ஓ

குடைந்து அம் மலையின் ஊடே வழியுண்டாக்கின" என்பது புதியவுரை (பொ. வே. சோமசுந்தரனார் உரை)

மலையை உடைத்தும் குடைந்து ம் பழியுண்டாக்குதல் இற்றைப்போக்கு வரவுக்கு உலகெல்லாம் காணும் காட்சிதானே! இக்காட்சி பரிபாடலில் விளங்குகின்றது. தம் வருகையைத் தடுத்து நின்ற விந்திய மலையின் முதுகில் அடிவைத்து அதனைத் தாழச் செய்து அகத்தியர் தென்னாட்டுக்கு வந்தார் எனப்படும் தொன்மக்கதையும் இவண் எண்ணத் தக்கது. குருகுமலை, வானத்தொடும் ஒன்றி அதனோடு ஒப்பநின்ற தென்றும், அம்மலையாக இருந்தவன் கரிமுகன் எனப்படும் யானைமுக அசுரன் என்றும். அதனை வேலால் துளைத்து அவ்வசுரனை அழித்தான் என்றும், ஒலியும் ஒளியும் திகழ வண்ணத்தில் வனப்பாக்குவார் அருணகிரியார்;

“ஒன்றென் றென்றும் துன்றும் குன்றும் துளைபட மதகரி முகனுடல் நெரிபட டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடிமென விழுமெழு படிகளு மதிர்பட

ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்

றொலிசெய மகபதி துதிசெய அசுரரை - அடுவோனே”

என்பது அது.

இம்மலை வெற்றி, மலையா வெற்றியே! குன்றகு உடைய அவன், குன்றம் அழித்தது என் என்பதை விளக்குவார்போல, அக்குன்றம் தெவ்வுக்குன்றம் என்றாம் பரிபாடலார். தேவக்குன்றம் அன்று; தெவ்வுக்குன்றம் (பகைக் குன்றம்) ஆதலால், குன்றம் அழித்தான் குன்றுதோறாட வல்ல குமரன் என்க. இதனை,

“எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து

தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி அவ்வரை உடைத்தோய் நீ இவ்வரை மருங்கில் கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம்

என்கிறது பரிபாடல் (19:101-4)