உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

'களவு சிறப்புடையது எனின், கற்புச் சிறவாதோ என்று வினாவில், கற்புச் சிறப்பது ஊடலாலேயே ஆகும்; அவ்வூடலும் தலைவன் வாயில் வேண்டலும், தலைவி வாயில் நேர்தலும் ஆகிய இத்தகைய ஒழுக்கங்கள் அமைந்து, தலைவன் பரத்தமையால் வருவதாகும். தலைவன் பரத்தை இல்லில் இருக்கத் தலைவி தோழியைச் செவ்வணியணிந்து விடுப்ப அவன் தலைவியிடம் வந்து ஊடிக்கூடும் இயல்பினால் அக்கற்பில் இன்பம் உண்டான தாகும். இவ்வாறிருத்தலால் களவுப் புணர்ச்சியுடைய மகளிர் தம் தலைவரொடு மாறுபாடு கொண்டு ஊடும் குறையினர் அல்லர். ஆதலால், களவுப் புணர்ச்சியே கற்பிற் புணர்ச்சியிற் சிறந்தது என்று பாராட்டும் பொருளிலக்கணத்தை ஆராயாதவர் குறிஞ்சிக் களவொழுக்கப் பயனை அடையார்" என்கிறார்.

66

“தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்றுப் பயன் (9:25-6)

என்பதில் பொருளிலக்கணச் சிறப்பும், அதனைக் கொண்ட தமிழின் சிறப்பும், அத்தமிழ்ப் பொருளை ஆய்ந்தார் இன்பச் சிறப்பும் தொகுத்துரைக்கப்படுதல் காண்க.

சூளிடல் :

தலைவியரானே தூதுவிடப்பட்ட வண்டு, தலைவரோடு மீண்டது. அதன் ஒலிப்பெருக்கம் தலைவியர் காதற் பெருக்கத்தை மதுரை மூதூரார் அறிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது.

வண்டுத் தூதால் வந்த தலைவன் ஒருவன், தன் தலைவியை நோக்கி, "இத்திருப்பரங்குன்றம், மாவடுக் கண்ணையும், மாந்தளிர் நிறத்தையும் மூங்கில் தோளையும், வளைக் கையையும் உடைய மகளிரின் நுகர்ந்து முடியாத களவிற்புணர்ச்சியையும், மணம் செய்து கொண்டு தம் கணவர் அன்பில் உறையும் மகன்றில் பறவைகளின் புணர்ச்சியை ஒத்த அகலாத கற்பிற்புணர்ச்சியையும் மறவாமல் வழங்கும் சிறப்புடையது" என்றான்.

இதனைக் கேட்ட தலைவி, "நீ இப்பொழுது அயல் மகளிர் மணத்தையுடையை; ஆங்குக் குளிர் மலர் போலும் கண்ணை யுடைய மகளிரொடு கூடி ஆடுவதற்காகவே, காலையில் போய் மாலையில் திரும்பி ஒவ்வொரு நாளும் வருகின்றாய்! இவ்வாறுடையை நீ பிரியேன்; பிரியின் உயிர் தரியேன்" என்று முன்சொன்ன மொழியை மீளவும் சொல்லாதே" என்றாள்.