உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

27

ப்பொழுது என்ன நினைத்துக் கொண்டு பார்க்கிறாய் என்பதை அறிந்தேன். இம்மயில் என்னினும் அழகிற் சிறந்தது என்று நீ நினைத்து மெய்ம் மறந்து காணலால் என்னை இகழ்ந்தாய்! என்னை இகழ்வதை மறைத்துக் கொண்டு நீ பார்த்தாலும் நான் உண்மையறிந்தேன்: உண்மையைச் சொல் என்று ஊடினாள். அதனைக் கேட்ட தலைவன் "அன்புடையாய், உன் அழகைக் கவர்ந்துகொள்ள முயன்று அது முடியாமல், தன் களிப்புறும் ஆட்டத்தாலே கவர்ந்து கொள்ள நினைத்தும் அதுவும் கூடாமல் நினக்குத் தோற்றுப்போகும் இம்மயிலின் இரங்கத்தக்க நிலையையே யான் எண்ணினேன்; நீயோ யான் நின்னை இகழ்ந்ததாகக் கருதுகின்றனனை' என்று நயந்து கூறி அவள் ஊடலை அப்பொழுதிலேயே தீர்த்தான். இது செவ்வேள் குன்றத்தின் சிறப்பாகும்.

இஃதொரு காட்சி, இப்பாடலிலேயே மற்றொரு காட்சி.

பாணன் :

தலைவன் பரத்தை வழிப்பட்டு நின்று பின்னர் தலைவியை நாடினான். தலைவி அவன்மேற் சினந்து வாயில் மறுத்தாள். தலைவன் பாணனைத் தலைவியிடம் தன் தூதாக விடுத்தான். அப்பாணனை நோக்கித் தலைவி இடித்துரைத்து, அவன் பொய்ம்மையை வெளிப்படுத்தியது அக்காட்சி :

"பொன்னணி பூண்டு உடற்பொலிவோடு விளங்கும் பாணனே, சிறந்த வளங்களையுடைய அழகிய பரங்குன்றின் மேல் உள்ள சுனையில் புத்த, நீலமலர் போலும் வளப்பமிக்க அழகிய தண்ணிய கண்ணையுடைய பரத்தையரைத் தலைவன் இறுக்கமிகத் தழுவலால் அவர் உண்டாக்கிய

வளமான

வடுவமைந்த கைந்நகம் உண்மை யாமறியவும் நீயறியாயோ? நட்டபாடை என்னும் பண்ணைத் தரும் நின்யாழ் நரம்பிற்குப் பொருந்திய தாளத்தையுடைய சிறந்த பாட்டு, தலைவன் பரத்தமை உடையன் அல்லன் என்னும் பொருளொடு பொருந்தி வருதலால். பொய்ம்மையுடைய தாயிற்று!" என்று இகழ்ந்தாள்.

செவ்வேள் பரங்குன்று சார்ந்தார் பொருளியல் வாழ்வு இவ்வாறாகச், செவ்வேள் வாழ்வொடும் பின்னிய பொருளியற் செய்தியும் பரிபாடலில் மிகச்சுவையாகப் புனையப் பட்டுள்ளது.