உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

29

"தேவசேனையின் தோழிமார் செயல்களைக் கண்ட வள்ளியின் தோழிமார், மதங்கொண்ட யானையின் தன்மை யராகவும், வட்டமிட்டுச் சாரி வரும் திரையின் இயல்பினராகவும், தேர்வரிசை வருவது போல வடிகயிறு கொண்டு வருபவராகவும், அம்புகோத்து வளைக்கப்பட்ட வில்லினை உடையவராகவும், வாட்படையைக் கொண்ட போர்வீரர் போன்றவராகவும், வளையல்களையே சக்கரப் படையெனக் கொண்டு சுழற்று பவராகவும் எதிரிட்டு நின்றனர்.

வள்ளியின் தோழிமார் செயல்களைக் கண்ட தேவ சேனையின் தோழிமார் மலைபோலும் மார்பினையுடைய செவ்வேளைச் சுற்றி வளைத்துக் கொண்டு மணமிக்க சுனையில் பாய்ந்து நீராடினர்; அச்சுனையில் தேனுண்ணும் வண்டுகளாய் இசை எழுப்பினர்: தோகை விரித்தாடும் மயில்களாய் ஆடினர்; குயில்களாய்க் கூவினர்; பின்னர்ச் செயல் ஒன்றும் கூடாமல் வருந்தியும் நின்றனர். “குறிஞ்சி நிலத்துக் குறவர் கொடியாகிய வள்ளியின் தோழியர், கலைமலிந்த பல்வகைப் போர்களைத் தொடுத்துச் செய்து தேவசேனையின் தோழியரை வெற்றி கொண்டனர். அதனால் குன்றம் செவ்வேளுக்கு உரிமை யுடையதாயிற்று (9:27-69)

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்'

என்பது முப்பால் முடிவு, இப்வூடிக்கூடும் இன்ப இலக்கணத் திற்குச் செவ்வேள் காதலும் கற்பும் இலக்காகப் படைக்கப்பட்ட படைப்பு இப்பரிபட்டாதல் அறிக. ஊடலில் தோற்பது தோல்வி அன்று; அதுவே வெற்றி; கூடலின் போது அவ்வெற்றி புலப்படும். இதனை,

“ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப்படும்”

என்கிறது குறள் (1327). மாபெரும் வீரனும் குடும்ப வாழ்வில் அல்லது காதற் பொருளியல் வாழ்வில் தோற்றும் பணிந்தும் நின்று துய்த்துத் துவர நீக்கிச் சிறந்தது பயிற்றலே சீர்மையது என்பதே இதன் விளக்கமாம். வாழ்வியலுடன் சார்த்தி அறிவார் இதன் வளம் கண்டு நலம் பெறுவார் என்க.

வள்ளிமணம் களவு வழிவந்தது. தேவயானை மணம் கற்பு வழிவந்தது. களவு வழிவந்த உறவு, கற்பாக நிலை பெறுதலே