உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 35ஓ

பொருளியல் கொள்கை. களவியல் கற்பியல் என்னும் இலக்கணக் குறிகளும் இவற்றின் துறை விளக்கங்களும் இவ்வகைப்பட்டனவே. அதனால் திருவள்ளுவர் போலும் சான்றோரும் அவ்விலக்கண வழிகொண்டே நூல் யாத்தனர். களவு மணம் ஒருவர்க்கும் கற்பு மணம் ஒருவர்க்கும் எனப்பகுப்பின்றிக் களவின் வழித்தே கற்பு என்பது முறைமை ஆயின், வள்ளியின் களவு மணத்தையும் தேவயானையின் கற்பு மணத்தையும் உட்கொண்ட நப்பண்ணனார் அவற்றை ஓர் அரிய வகையால் அமைத்துச் சுவையூட்டுகிறார்

என்க.

இருவகைமணம் :

விண்ணவர்கள் பெறும் இன்பத்தை மண்ணவரும் பெற வேண்டும் எனச் செவ்வேள் திருவுளம் கொண்டானாம். அதனால், விண்ணவர் புகழும் அவ்வண்ணல், மண்ணவர் மகிழுமாறு பரங்குன்றிலே அமர்ந்து மயில்போலும் வள்ளியை மணங் கொண்டானாம்! விண்ணவர்க்கு அவன் எத்துணை அணுக்கனோ அத்துணை அணுக்கன்மண்ணவர்க்கும் என்று கூறுமுகத்தான், அவன் ஒப்புரவாண்மை குறித்தாராம் புலவர் என்க.

பரங்குன்றில் தேவயானையை மணங்கொண்டான் என்னும் செய்தியே, தொன்ம வழி வழங்குகின்றது. அத்தொன்மத்திற்கு முன்னைத் தொன்மமாம் பரிபாடற் குறிப்பு, வள்ளி மண வாளனாகவே பரங்குன்றச் செவ்வேளைக் காட்டுகின்றது. இஃது அறியத் தக்கது.

“மான்மறி தோண் மணந்த ஞான்று” (9:8) “வள்ளிப் பூ நயந்தோய்" (14:22) “மயிற்கொடி வதுவை" (19:6)

“குறப்பிணாக் கொடியைக் கூடியோய்" (19:95) என்பவை பரிபாடல் தொடர்கள்

இனிச் செவ்வேள் விரும்புவன எவை எவை என்பதையும் சுட்டுகிறார் கேசவனார்: கார் காலத்து வெண்மேகம் எழுந்தது போல எழும் மணப்புகையை விரும்புதல். பிறரை வெல்லும் எழில் வாய்ந்த வள்ளியின் நலத்தை விரும்புதல் பிரிந்து வாடினோர், மீண்டும் பிரியாமை வேண்டி யாழிசை எழுப்பிப் பாடுதல் விரும்புதல், இருபிறப்பும் ஈர நெஞ்சும் உடைய அந்தணர் தம் அறப்பண்பை விரும்புதல் என்பன அவை. இவற்றைக்,