உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பரிபாடலில் திருமுருகன்

"கறையில் கார்மழை பொங்கி யன்ன

நறையில் நறும்புகை நனியமர்ந் தோயே; அறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே; கெழீஇக் கேளிர் சுற்றம் நின்னை எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே; பிறந்த ஞான்றே ன்னை உட்கிச்

சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே இருபிறப் பிருபெயர் ஈர நெஞ்சத்

தொருபெய ரந்தணர் அறனமர்ந் தோயே'

என்கிறார் (14:19-28)

31

வேண்டுதல் வேண்டாமை இலனாம் இறைவன் வேண்டு தலாக உரைத்தது, நல்லவை நானிலத்து நிகழல் வேண்டும் என்னும் பெருவேட்கையாலேயாம் என்று கொள்க. பாவலர் வேட்கையின் பரந்தியல் நிலையைப் பகர்வது இவ்வேண்டுகை என்று தெளிக.