உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. செவ்வேள் வழிபாடு

செவ்வேள் ஆகிய சேயோன் வழிபாடு மிகப் பழமை யானது. கதிர்வரக் கண்டு காரிருள் அகன்று போகக்கனிமாந்தர் களிப்புற்ற காலந்தொட்டு உண்டாகிய வழிபாடு அது. அவ்வழிபாடு, கோயில் எடுத்துக் கூட்டங்கூடிப் பல பலபடியாக வளர்ந்துவிட்ட நிலையில் எப்படி நடந்தது என்பதைப் பரிபாடல் காட்டுகின்றது.

விழா எழுச்சி :

"செவ்வேளின் சிறந்த அடியவர்கள் விழாக் கொண்டு எழுந்தனர். வெவ்வேறு வகையான சாந்துகளுக்கு மணத்தால் சிறக்கின்ற புகைவகைகளும், காற்று ஆதலால் அணையாத வகையில் அமைந்த விளக்குகளும், எழுப்புதற்குரிய முழவு வகைகளும், மணி, கயிறு, கோடரி,பிணிமுகம் (யானை) ன்னவாகச் செவ்வேள் விரும்பும் பொருள்களும் கையில் ஏந்திக்கொண்டு திருப்பதி குன்றஞ் சேர்ந்தனர்" என்கிறது எட்டாம் பரிபாடல் (96-102)

"சீறடியவர் சாறுகொள எழுந்த

வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும், ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்,

நாறுகமழ் வீயும், கூறுமிசை முழவமும்,

மணியும், கயிறும், மயிலும், குடாரியும்,

பிணிமுகம் உளப்படப் பிறவும், ஏந்தி அருவரை சேரா'

என்பது அது.

அடியவர்கள் என்றோ எப்பொழுதோ வழிபடுதல் அன்றி, அடுத்துச் சென்று ஆர்வப் பெருக்கால் வழிபட்டனர் என்பது, "அதமர்ந்தியாம் நின்னைத் துன்னி துன்னி வழிபடுவது வரும் பதினான்காம் பரிபாடலால் விளங்கும் (29.30).