உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

வழிபாட்டுச் சிறப்பு :

-

33

பதினேழாம் பாடலும் வழிபாட்டுச் சிறப்பை வனப்புறப் பாடுகின்றது. அவ்வழிபாட்டு இன்பத்திற்காக அதனை இடையீடு இன்றிப் பெறுவதற்காக விண்ணுலக இன்பத்தையும் விரும்பாராய் மண்ணுலகிலேயே வாழவேண்டும் என்னும் பேரார்வப்ெெபருங்காதலராய்த் திகழ்ந்தமையையும் அப்பாடல்

சுட்டுகின்றது.

"தேம்படு மலர், குழை, பூந்துகில், வடிமணி,

ஏந்திலை சுமந்து, சாந்தம் விரைஇ,

விடையரை அசைத்த வேலன் கடிமரம்

பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,

விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக்

கோலெரி, கொளை, நறை, புகை, கொடி ஒருங்கெழ மாலை மாலை அடியுறை இயைநர்

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?" (17:1-8)

இனிய மலர், இளந்தளிர், பூவேலைப்பாடுடைய பட்டு வேலைப்பாடு மிக்க மணி, உயர்ந்த இலைவடிவில் செய்யப்பட்ட வேல் ஆகிய வழிபாட்டுக் குரியவற்றைச் சுமந்து கொண்டு வந்தனர். சந்தனம் தெளித்து ஆட்டுக்கடாவினைக் கட்டிய கடம்புமரத்தினை உரையால் வாழ்த்தினர்; இசையெழுப்பிப் பாடினர்; மலர்ந்த பூவின் தேனால் நனையும் மரங்கள் மிக்க வளமான குன்றத்தில் தீப்பந்தம், இசைக் கருவிகள், நறுமணப் பொருள்கள், அகிற்புகை, கொடி ஆகிய இவற்றை ஒரு மொத்த மாகக் கொண்டு ஒவ்வொரு நாள் மாலையிலும் தங்குவதைப் பெருவாழ்வாகக் கொண்டனர். இத்தகைய வழிபாட்டின்பம் வழிவழி வேண்டுமென விரும்புதலையன்றி விண்ணுலகத்து உறைந்து பெறும் வீட்டின்பத்தையும் விரும்புவார் இலர்! "வீடும் வேண்டா விறலின் விளங்கினார் எனத் திருத்தொண்டர் எண்ணலைத் திருத்தொண்டர் புராணத்தில் தொண்டர்சீர் பரவுவார் ஆகிய சேக்கிழார் பாடினார். அவர்க்கு முன்னேயே இப்பரிபாடல், "மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?" என வினாவுகின்றது. 'வழிபாடு, வழிபாட்டுக்கே அன்றி, வேறு பயனுக்கு அன்று' என்றும் முதிர்நிலை இது. ஆனால், பொதுநிலை இஃதன்று என்பது அடுத்துவரும் செவ்வேளிடம் வேண்டுதல் என்னும் பகுதியால் விளங்கும்.