உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

வழிபாட்டு நோக்கம்:

வழிபாட்டு இன்பமொன்றே கருதுபவர்களும், செவ்வேள் அடியுறைவாழ்வே வேண்டுமென்று ஆர்வம் மிக்கிருந்தவர் களும், குடும்பமாய்க் கூட்டமாய்ச் சுற்றமாய்த் திகழ்ந்தன என்பது பதினெட்டாம் பரிபாடலால் அறியவருகின்றது.

"வெற்றி மிக்க வேல, நின் வழிபாட்டில், யாழிசையும் இசைப்புலவர் பாடிய பாடலும் பொருந்தவும், மறையொலி, மலர், விளக்குகள் திகழவும் அகிற்புகை சந்தனப்புகை கமழவும், எம் சுற்றத்தாருடன் எம் ஊரின் கண் தங்குவது போல் நின் திருவடி க்கண் தங்குவதைப் பிரிவில்லாமல் யாம் பெற நீ அருள்வாயாக" என வேண்டுகின்றனர்.

"புரிபுறு நரம்பும் இயலும் புணர்ந்து

சுருதியும் பூவும் சுடரும் கூடி

எரியுரு க்கிலோ டாரமும் கமழும்

செருவேற் றானைச் செல்வநின் அடியுறை

உரிதினின் உறைபதிச் சேர்ந்தாங்குப்

பிரியா திருக்கஎம் சுற்றமோ டுடனே" (18:51-56)

இப்பகுதி வழிபாட்டு வேண்டுதலாக இருப்பினும் இவ் வேண்டுதல் வேறொன்றும் இன்றி முருகன் அடியுறையையே விரும்புதலின் வழிபாட்டுப் பயன் குறித்ததேயாம்.

"நயத்தலிற் சிறந்தஎம் அடியுறை பயத்தலிற்

சிறக்க நாடொறும் பொலிந்தே" (9:84-5)

இவ்வாறே, குன்றத் தடியுறையியைகெனப் பரவுதும். வென்றிக் கொடியணி செல்வநிற் றொழுது" என்றும் (21:16-7) "நன்றமர் ஆயமோ டொருங்குநின் அடியுறை இன்றுபோல் இயைகெனப் பரவுதும்" என்றும் (21:68-9) "கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம் உடங்கமர் ஆயமோ டேத்தினந் தொழுதே" என்றும் (19:104-5) வருவன இவ்வாறு பிறிதொரு பொருள் நோக்காது அடியுறை விரும்பியதேயாம்.

விளிநிலை :

வழிபாட்டாளரும்

பாட்டாளரும் செவ்வேளைப்

பல்வகையாக விளித்து மகிழ்கின்றனர். செவ்வேள் என்பது