உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. செவ்வேளிடம் வேண்டுதல்

"வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்பது நாவுக்கரசர் நல்லுரை. "வேண்டுதல் வேண்டாமை இலா' னாகிய அவன் வேண்டுவார் வேண்டுவதை ஈவான் என்பதை அடியார்கள் உணர்ந்தனர். உணர்ந்ததை உரைத்துப் பரப்பினர்; அவ்வாறு பிறரும் வேண்டிப் பெறுமாறு வழிகாட்டினர். அவ்வகையில் அமைந்த பாடல்கள் மிகப்பல. அவ்வேண்டுதல் பெரும்பாடலுள் ஒன்றே திருமுருகாற்றுப்படை

வேண்டுதல் :

வீடும் வேண்டா நிலையில் வழிபட ஓர் உயர்நிலை வேண்டும்: அந்நிலை அனைவர்க்கும் வாய்ப்பது அன்று. பயன் நோக்கிச் செய்யும் செய்கைகளே பாருலகப் பொதுமை. அப்பொதுமையில், பொதுநலப் பான்மையே திகழ வேண்டிய வர்களும் உளர்; வள்ளலார் அவ்வகையில் கண்காண வாழ்ந்து கனிந்து கனிந்து வேண்டி நின்றவர். அதன் அரும்புதல் நிலை சங்கத்தார் காலத்திலேயே தோன்றிவிட்டது. அதற்குச் சீரிய சான்றுகளாக விளங்குவன பரி பாடலில் வரும் வேண்டுதல்கள்.

யாம் இரப்பவை :

செவ்வேட் பெருமானிடம் வேண்டும் வேண்டுதல்களில் முந்து நிற்பது கடுவன் இளவெயினார் பாட்டு )5), "கடப்ப மாலை அணிந்த செவ்வேளே யாம் நின்னிடத்து இரந்து வேண்டுபவை துய்க்கும் பொருளோ, அத்துய்ப்புக்கு உதவும் பொன்னோ அன்றித் துய்ப்போ அல்ல; எவ்வுயிர்க்கும் இரங்கும் அருளும் அதற்கு மூலமாம் அன்பும், அவ்வன்பிற்கு நிலைக்களமாம் அறமும் ஆகிய மூன்றுமேயாம்" என்கிறார். பொருளன்று நின்னிடம் வேண்டுவது; வேண்டுவது அருள். பொன்னன்று நின்னிடம் வேண்டுவது; வேண்டுவது அன்பு போகம் அன்று நின்னிடம் வேண்டுவது; வேண்டுவது அறம்.

"பொருள் பூரியார் கண்ணும் உண்டு; ஆயின் அருள் நேரியரன்றிப் பிறரை அணுகாதது.