உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

37

பொன் பொன்றுதற்கும் வழிகாட்டும்; பொலிவுச் செருக்குக்கும் வழிகாட்டும். அன்பு உயிர் நிலையாக விளங்கும்; அருளாகி அருளாளனைச் சார வழி காட்டும்.

போகம் தான் துய்த்து இன்புறும் அளவில் உதவும்; அறம் ஈத்துவக்கும் இன்பக் களமாய் இருபாலும் இன்பம் சேர்க்கும். ஆதலால் பொருளும் பொன்னும் போகமும் வேண்டா; அருளும் அன்பும் அறமும் தனித்தனியன்று; மூன்றும் ஒருங்கே எய்த அருள்க!" என்பாராய் வேண்டுகிறார்.

“யாம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே" (5:79-81)

என்பது அது.

'கனவிற் கண்ட எம் காதலர் நனவில் அடையுமாறு வையை புதுநீர் வரவு கொள்வதாக" என்று வரம் வேண்டுபவரும், "எம் வயிறு கருவுறுவதாக; அவ்வாறு உற்றால் நினக்கு இன்ன இன்ன பொருள்களைத் தருவோம்" என நேர்ந்து கொள்பவரும் "எம் தலைவர் பொருள் தேடுவதற்காகப் பிரிந்த பிரிவு, பொருள் வளம் சேர்ப்பதாக" எனச் செவ்வேள் செவியில் சேர்த்துபவரும், போர்மேற் சென்ற வேந்தன் 'பகைவென்று மீள்வானாக

,

என

வழிபாடு செய்பவரும், செவ்வேளை வாழ்த்திப் பாடுபவரும், பாடுவார் பாட்டிற்கு ஏற்பத் தாளத்தோடு ஆடுவோருமாகப் பரங்குன்றில் இறையன்பர்கள் விளங்கும் காட்சியை எட்டாம் பரிபாடல் கூறுகின்றது.

இதில் தம் காதலரைப் பெறும் அளவில் வேண்டுகை நிற்கவில்லை என்பதை அறிக. அவ்வாழ்வின் பயனாகவும் வழி வழியாக உலகநலம் உண்டாதல் வேண்டிக் கருவுறுக என வேண்டுவதும், பின்னர்க் குடிநலம் காக்க உதவும் பொருள் வளத்தின் இன்றியமையாமை உணர்ந்து அது பெருமை வேண்டுவதும் ஆயிவை ஒன்றின் மேல் ஒன்று வேண்டுகைகளே"

பெருநல நாட்டம்

66

சிறந்த

இனி நாட்டுநலம் கருதுவாராய் வேந்தன் வெல்க என்றது மிகப் பாராட்டுக்குரியதாம். இதன் மேலும் சிறப்பினதாகச் செவ்வேளை வாழ்த்தும் அளவே வேண்டுகையாக நின்றது சுட்டத் தக்கதாம்,