உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் -35

"கனவில் தொட்டது கைபிழை யாகாது

நனவிற் சேஎப்ப நின் நளிபுனல் வையை வருபுனல் அணிகென வரங்கொள் வோரும்; கருவயி றுறுகெனக் கடம்படு வோரும்;

செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்துவோரும்

ஐயமர் அடுகென அருச்சிப் போரும்;

பாடுவார் பாணிச் சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும் (8:102-9) என்பது காண்க. இதே பரிபாடலில் நிறைவில் "நெறிநீர் அருவி அசும்புறு செல்வ;

மண்பரிய வானம் வறப்பினும் மன்னு கமா தண்பரங் குன்றம் நினக்கு

99

என்று ஓர் அரிய வேண்டுகையும் வருகின்றது. "மண்ணுலகத் துயிரெல்லாம் வருந்தும் வண்ணம் வானம் பொய்ப்பதேயாயினும் நின் தண்ணிய பரங்குன்றத்து அருவி இடையறாது ஒழுகுவதாகிய செல்வம் என்றும் நிலைபெறுவதாக என வேண்டுகிறார். வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்று சங்கச் சான்றோர் பாடியது போல் வான் பொய்ப்பினும் பரங்குன்ற அருவி பொய்க்காமை வேண்டிய வேண்டுதல் ஈதாம். இவ்விடத்தே ஒரு செய்தி: இற்றைப் பரங் குன்றெனக் காண்பார் அருவி, சோலை எனச் சொல்வதெல்லாம் வறும்புனைவே என்று எண்ணுதல் கூடும். ஒரு முப்பது ஆண்டுகளின் முன்னே ஆண்டுக்கும் மூன்று நான்கு திங்கள் அளவு பரங்குன்றத்தில் தென்கீழ்ப் பகுதியில் அருவியாய் ஒழுகிக் குளம் நிரப்பிக் கால்வழி பரந்தது கண்கூடு. ஆண்டு முழுவதும் தென்பகுதியில் சுனைகள் பல ஊற்றெடுத்துச் சென்றதும் கண்கண்ட சான்று. வளமான மேல்மலைத் தொடரே கரிக்காடாகிக் கரிந்து பட்டதை அறிவார் இயற்கையை அழித்த மாந்தர் செய்வினையைக் கருதி இரங்குதல் அன்றி, இயற்கையை ஐயுறுதலில் முறையில்லையாம்!

சேவலங் கொடியோனாம் செவ்வேள் காத்தலால் உலகம் பாதுகாப்பு மிக்க நாளைப் பெற்றது என்பது பெருந்தேவனார் கூறும் செய்தி (குறுந். கடவுள் வாழ்த்து).

பரிபாடலார் பாடுகின்றார். அவர் பெயர் நல்லழிசியார். இறைவ,