உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

பணியொரீஇ நின்புகழ் ஏத்தி

அணிநெடுங் குன்றம் பாடுதும் தொழுதும்

அவை, யாமும்எம் சுற்றமும் பரவுதும்

ஏம வைகல் பெறுகயாம் எனவே" (17:50-53)

39

என்பது அது. 'பணியொரீஇ நின்புகழ் ஏத்தி" என்பதற்கு மக்கண் மாட்டுப் பணிமொழியை ஒழிந்து நின் புகழையேத்தி எனப் பொருள் வரைகிறார் பழைய உரைகாரர் பரிமேலழகர்.

இதற்குப் பெருவிளக்கம் வரைகிறார் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்.

'பணி - பணிவுடைமையைக் காட்டும் முகமன் மொழி அவை மிடுக்கிலா தானை வீமனே விறல் விசயனே வில்லுக் கிவனென்றும் கொடுக்கிலா தானைப் பாரியே என்றும் கூறும் புன்மொழிகள். அங்ஙனம் தம்மையே ஒத்த சின்னாட் பல்பிணிச் சிற்றறி வினராகிய மனிதரைப் பொய்யே புகழ்ந்த விடத்தும் அவர் கொடுத்ததும் இல்லை. ஒரோவழிக் கொடுப்பினும் அப்பொருள் போதப்பயன் தருதலும் இல்லை. ஆதலின் இப்பேதமைத் தொழிலை இனி அறவே ஒழித்து இம்மை இன்பமும் மறுமை இன்பமும் அந்தமில் இன்பத்து வீட்டின்பமும் தரவல்ல நின்னையே ஏத்தித் தொழுவோம். அவற்றுள்ளும் நிலையாதல் இல்லாத இம்மை மறுமை இன்பங்களைப் பெறுதல் எம் கருத்தன்று; என்றென்றும் நினலத்த நின் திருவடியின்பமே யாங்கள் பெறக்கருதி இறைஞ்சுகின்றோம் என்றவாறு என்பது

அது .

முரணாகுமா?

புலவர்ப்பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான வூர்தியும் பெறுவர்"

என்றும், 'ஓங்கிய சிறப்பின் மாங்குடி மருதன், முதல்வனாகப் புலவர் பாடாதொழிக என் நிலவரை" என வேந்தன் வஞ்சின மொழியில் வைத்துப் பாடிய புகழ் மிக்கோர் புலவர் என்றும், வள்ளல்களை நாடிப் புள்ளெனச் சென்று வளம் பெற்ற பாடல் களின் வரியே புறப் பாடல்கள் என்றும் அறிவார் வள்ளல்களைப் பாடிப் போற்றிய சங்கத்தார் கால நிலையை அறிந்து கொள்வர்.

அவர்க்கு, இப் பரிபாடல் செய்தி, முரணாகத் தெரிதல் கூடும். ஆனால், உலகியல் பொது நிலை நீங்கிய புலவர்களும்